இன்பமாக மாறியது அச்சம்

இன்பமாக மாறியது அச்சம்

1 mins read
1db60db7-e9c8-45cb-b4a2-193033706b52
ஐரோப்பியசாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில்போர்ட்டோவுக்கு எதிராககோல் போட்டவுடன் தனது பயிற்றுவிப்பாளர் டியேகோ சிமியோனியுடன் (இடது) கொண்டாடும் அட்லெட்டிக்கோமட்ரிட் வீரர் அங்ஹெல்கோரியா (வலது). படம்: இபிஏ -

போர்ட்டோ: ஐரோப்­பிய சாம்­பியன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் முதல் சுற்­றி­லேயே வெளி­யேற்­றப்­படும் விளிம்­பில் இருந்த ஸ்பெ­யி­னின் அட்­லெட்­டிக்கோ மட்­ரிட், போர்ச்­சு­கலின் போர்ட்டோ அணியை வென்று தனது தலை­யெ­ழுத்தை மாற்றிக்­கொண்­டுள்­ளது. 'பி' பிரி­வில் ஏசி மிலா­னும் தோல்­வி­ய­டைந்­தது அட்­லெட்­டிக்­கோ­விற்­குச் சாத­க­மாக அமைந்­தது.

போர்ட்­டோவை 3-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது அட்­லெட்­டிக்கோ. தப்­பாட்­டம் கார­ண­மாக அட்­லெட்­டிக்­கோ­வின் யானிக் கராஸ்­கோ­வும் போர்ட்­டோ­வின் வெண்­டல், அகஸ்­டின் மார்க்­கெசின் ஆகி­யோ­ரும் ஆட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர். கார­சா­ர­மான ஆட்­டத்­தில் கவ­னத்­து­டன் ஆடி இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது அட்­லெட்­டிக்கோ.

"எனது விளை­யாட்­டா­ளர்­களை எண்ணி நான் பெரு­மைப்­படுகிறேன்," என்று சொன்ன அட்­லெட்­டிக்கோ பயிற்­று­விப்­பா­ளர் டியேகோ சிமி­யோனே, "அவர்­கள் மீண்­டு­வ­ரும் ஆற்­ற­லைக் காட்­டி­னர், எதிர்­கொண்ட சவால்­களை வைத்­துப் பார்க்­கும்­போது போராட்­டத்­தைக் கையாளும் அவர்களின் திறனும் தெரி­கிறது," என்­றும் கூறி­னார். எனி­னும், இப்­பி­ரி­வில் தனது அணி இன்­னும் சிறப்­பாக விளை­யா­டி­யி­ருக்­க­வேண்­டும் என்­ப­தை­யும் சிமி­யோனே ஒப்­புக்­கொண்­டார். "நமக்­குக் கிடைத்­தது போட்­டி­யில் ஆகச் சவா­லா­ன­ பிரிவுகளில் ஒன்று. இதில் எல்லா அணி­களுக்கு எதி­ரான ஆட்­டங்­க­ளி­லிருந்­தும் சில புள்­ளி­க­ளைப் பெறு­வோம் என்று எதிர்­பார்த்­தேன், ஆனால் லிவர்­பூலுக்கு எதி­ராக அது நடக்­க­வில்லை. மிலா­னை­யும் போர்ட்­டோ­வை­யும்­விட கூடு­தல் புள்­ளி­க­ளைப் பெற்­றோம். நாங்­கள் எங்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும், அதை இவ்­வாறே செய்­ய­வேண்­டும்," என்­றார் சிமி­யோனே.

கடந்த சில ஆண்­டு­க­ளாக நடு­நிலை ரசி­கர்­க­ளை­யும் அட்­லெட்­டிக்கோ கவர்ந்­து­வ­ரு­கிறது. இவ்வணியிடமிருந்து வரும் கடும் போட்டியை எதிர்­கொள்­கிறது இதன் பரம வைரி­யான ரியால் மட்­ரிட்.