சுசுகி கிண்ணம்: உயிர்பெற்றது மியன்மார்

1 mins read

சிங்­கப்­பூர்: தென்­கி­ழக்­கா­சியாவின் தேசிய காற்­பந்து அணி­க­ளுக்­கான சுசுகி கிண்­ணப் போட்­டி­யில் மி­யன்­மார் புத்­து­யிர் பெற்­றுள்­ளது. நேற்று திமோர் டெஸ்­டெயை 2-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது இப்­போட்­டி­யில் தனது முதல் ஆட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரி­டம் மோச­மா­கத் தோல்­வி­யுற்ற மியன்­மார்.

நேற்று மாலை நடை­பெற்ற இந்த 'ஏ' பிரிவு ஆட்­டத்­தில் தான் பாய்ங், மாவ்ங் மாவ்ங் லுவின் ஆகி­யோர் மியன்­மா­ருக்கு கோல்­க­ளைப் போட்­ட­னர்.

இப்­பி­ரி­வில் இன்­னும் தாய்­லாந்­தை­யும் பிலிப்­பீன்­சை­யும் மியன்­மார் சந்­திக்­க­வேண்­டும். இவ்­விரு அணி­க­ளை­யும் வெல்­வது சவா­லா­னது. அதி­லும் தாய்­லாந்து சுசுகி கிண்­ணத்தை ஆக அதிக முறை வென்­றுள்ள அணி. மியன்­மார் இது­வரை கிண்­ணத்தை வெல்­ல­வில்லை. நாளை மறு­தி­னம் தாய்­லாந்­து­டன் மியன்­மா­ரும் மோதும்.