எதிர்­பார்ப்­பு­டன் இருக்­கும் ஜெரார்ட்

எதிர்­பார்ப்­பு­டன் இருக்­கும் ஜெரார்ட்

2 mins read
c00f370e-fdf6-440e-a796-ba421ac9eabe
ஸ்டீ­வன் ஜெரார்ட் -
multi-img1 of 2

லிவர்­பூல்: லிவர்­பூல் காற்­பந்­துக் குழு­வில் 15 ஆண்­டு­க­ளுக்கு மேல் கால்­ப­தித்து திற­மை­யான மத்­திய திடல் வீர­ராக பெயர் பெற்ற ஸ்டீ­வன் ஜெரார்ட் தற்­பொ­ழுது ஆஸ்­டன் வில்லா குழு­வின் நிர்­வா­கி­யாக குறிப்­பிட்­டுச் சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு திற­மை­யா­கவே செயல்­ப­டு­கி­றார் என்­று கூறப்­ப­டு­கிறது.

ஸ்டீ­வன் ஜெரார்ட்­ விளை­யாட்­டா­ள­ராக திகழ்ந்த கால­கட்­டத்­திற்கு பிறகு அவர் எப்­படி பெயர் பெறப் போகி­றார் என்­பது அவ­ரால் இறு­தி­யில் லிவர்­பூல் குழுவை நிர்­வ­கிக்க இய­லுமா என்­ப­தைப் பொறுத்தே இருப்­ப­தாக காற்­பந்து விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஆஸ்­டன் வில்லா நிர்­வா­கப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டுள்ள ஜெரார்ட்­டுக்கு இன்­றைய ஆட்­டமே மிக முக்­கி­ய­மா­னது.

அவ­ரு­டைய பொறுப்­பில் ஆஸ்­டன் வில்லா குழு இது­வரை நன்­றா­கவே விளை­யாடி வரு­கிறது.

எனி­னும், லிவர்­பூல் குழு­வின் நிர்­வா­கி­யாக, திறம்­ப­டப் பெயர் பெற்று வரும் யர்கன் கிளோப்­பின் பயிற்­சி­யால், பிரி­மி­யர் லீக் தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் இருந்­து­கொண்டு மான்­செஸ்­டர் யுனை­டெட் போன்ற குழுக்­களை எளி­தில் ஊதித் தள்­ளிய லிவர்­பூலை சமா­ளிப்­பது அவ்­வ­ளவு சுல­ப­மல்ல.

அதி­லும், லிவர்­பூ­லின் சாலா, சாடியோ மானே, டியோகோ ஜோட்டா ஆகிய தாக்­கு­தல் வீரர்­கள் தற்­பொ­ழுது காட்­டும் ஆட்­டத் திறனை வைத்­துப் பார்க்­கும்­

பொ­ழுது அந்­தக் குழுவை வெல்­வது ஆஸ்­டன் வில்­லா­வுக்கு நிச்­ச­யம் குதி­ரைக் கொம்­பா­கவே இருக்­கும்.

ஆனால், குறைந்த கோல் எண்­ணிக்­கை­யில் தோல்­வி­யைத் தழு­வி­னாலோ இல்லை அதற்­கும் மேலாக லிவர்­பூல் போன்ற ஒரு குழு­வு­ட­னான போட்­டி­யில் சம­

நி­லை கண்­டாலோ அதுவே ஸ்டீ­வன் ஜெரார்ட்­டுக்கு பெரும் வெற்றி­தான். லிவர்­பூ­லில் முன்­னைய வீரர் கென்னி டால்­கி­லிஷ், ஸ்டீ­வன் ஜெரார்ட் போலவே விளை­யாட்­டாள ராக ஆரம்­பித்து பின்­னர் அதே குழு­வில் நிர்­வா­கி­யா­கப் பொறுப் பேற்று ஓர­ளவு முத்­திரை பதித்­தார்.

காற்­பந்து குழுக்­களை நிர்­வ­கிக்­கும் பொறுப்­பிற்கு ஜெரார்ட் தம்மை நன்­றா­கவே தயார்ப்படுத்­திக்­கொண்­டுள்­ளார். லிவர்­பூல் குழு­வின் 18 வய­துக்­குக்­கீழ் உள்ள விளை­யாட்­டா­ளர் அணியை அவர் 18 மாதங்­க­ளுக்கு நிர்­வ­கித்­தார்.

அங்கு தற்­பொ­ழுது லிவர்­பூல் குழு­வின் நிர்­வா­கி­யாக பொறுப்பு வகிக்­கும் யர்கன் கிளோப்­பி­டம் நிர்­வா­கப் பொறுப்பை ஓர­ளவு கற்­றுக்­கொண்­டுள்­ளார். இதைத் தொடர்ந்து ரேஞ்­சர்ஸ் குழு­வில் ஜெரார்ட் சாதித்­தது அவ­ரைப் பல­ரும் உற்றுநோக்க வைத்­துள்­ளது.

இதெல்­லாம் ஒரு­பு­றம் இருக்­கட்­டும். தற்­போ­தைய நிலை­யில் லிவர்­பூ­லில் யகர்ன் காலம் 2024ஆம் ஆண்டு முடிவுறும் காற்­பந்து பரு­வம் வரை­யில்­தான். அதற்­குப்­பின் அவர் ஏற்­கெ­னவே கூறி­ய­து­போல் காற்­பந்து நிர்­வா­கப் பொறுப்­பி­லி­ருந்து சற்றே ஒதுங்­கி­யி­ருப்­பாரா, இல்லை லிவர்­பூல் சகாப்­தத்­தைத் தொடர்­வாரா என்­பது வெறும் யூகம்­தான்.

ஆனால் ஒன்று மட்­டும் நிச்­ச­யம். ஜெரார்ட், ஆஸ்­டன் வில்­லாவை தொடர்ந்து திறம்­பட நிர்­வ­கித்து கிளோப்­பும் லிவர்­பூல் குழு­வுக்கு முழுக்­குப் போட்­டால் ஜெரார்ட்டை கொண்டு வர­வேண்­டும் என்ற கூச்­சல் அதி­க­ரிக்­கும் என்­பது

திண்­ணம்.