செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read

ஏமாற்றமளித்த லெஸ்டர்

நெப்போலி: யூரோப்பா கிண்ணப் போட்டி ஒன்றில் நெப்போலியுடன் மோதிய இங்கிலாந்தின் லெஸ்டர் குழு எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி ஏமாற்றமளித்துள்ளது.

தற்காப்பு விளையாட்டில் மெத்தனமாக விளையாடிய லெஸ்டர் குழு அதற்கான விலையாக வெற்றியை 2-3 என இத்தாலியின் நெப்போலி குழுவிடம் பறிகொடுத்தது. இனி யூரோப்பா கிண்ண காற்பந்தில் இருந்து வெளியேறிய லெஸ்டர் அதற்கு அடுத்த நிலையிலான யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அந்தப் போட்டியிலும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டே முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.

ஆனால் யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீக் போட்டி பற்றிக் கூறும் லெஸ்டர் குழு நிர்வாகி பிரண்டன் ரோஜர்ஸ், "உண்மையைக் கூறவேண்டுமானால் அந்தப் போட்டி என்னவென்றே எனக்குத் தெரியாது.

"யூரோப்பா கிண்ணப் போட்டிகளிலேயே குறியாக இருந்ததால், அதுபற்றி சிந்திக்கவேயில்லை. எனினும், கூடிய சீக்கிரம் அதுபற்றி தெரிந்துகொள்வேன்," என்று விளக்கமளித்தார்.

பின்னர் தமது குழுவின் தோல்வி குறித்து பேசிய ரோஜர்ஸ், "குழுவில் பலர் ஒன்றும் புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளனர். பலவிதமான வியூகங்களை அமைத்து விளையாடியுள்ளோம். ஆனால், தனிப்பட்ட முறையில் வீரர்களுக்கு தொடர்ந்து எதிரணியினரிடம் பந்து அகப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற மனப்போக்கு இல்லை," என்று புலம்பினார்.

ரோகித் சர்மா தலைமை: விளக்கமளித்த கங்குலி

புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை தலைமை ஏற்க முடிவு செய்தது குறித்து பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்ாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

டி20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இருவகைப் போட்டிகளிலும் வெள்ளை நிறப் பந்து பயன்படுத்தப்படுகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் தலைமை ஏற்பதிலிருந்து தானாகவே கோஹ்லி விலகிக் கொண்டதால் அவருக்கு பதிலாக அதில் ரோகித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டார். இதேபோல் வெள்ளை நிறப் பந்தைப் பயன்படுத்தும் இன்னொரு போட்டியான ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வேறொரு தலைவர் தேவையில்லை என்று வாரியம் தீர்மானித்துள்ளதாக கங்குலி கூறினார். அதனாலேயே அதற்கும் ரோகித்தே தலைவராக இருக் கட்டும் என்று வாரியம் முடிவெடுத்ததாக அவர் கூறினார்.