முட்டிமோதி வாகை சூடிய மேன்யூ

முட்டிமோதி வாகை சூடிய மேன்யூ

2 mins read
97d400d4-eaa8-4fec-b72d-16b3ebcc9002
நார்விச் சிட்டியின் தற்காப்பு ஆட்டக்காரர் கிரான்ட் ஹேன்லியிடமிருந்து (இடது) பந்தைப் பறிக்கத் தீவிர முயற்சியில் இறங்கிய யுனைடெட் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.படம்: ஏஎஃப்பி -

நார்­விச்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்டி ஆட்­டத்­தில் நார்­விச் சிட்டியை 1-0 எனும் கோல் கணக்­கில் மான்­செஸ்­டர் யுனை­டெட் போராடி வென்­றது.

இந்த ஆட்­டம் நார்­விச் குழு­வின் கேரோ ரோடு விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

ஆனால் வெற்­றிக் கனி­யைப் பறிக்க யுனை­டெட்­டுக்கு பெனால்டி வாய்ப்பு தேவைப்­பட்­டது.

ஆட்­டத்­தின் 75வது நிமி­டத்­தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை யுனை­டெட்­டின் நட்­சத்­திர வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ கோலாக்­கி­னார்.

இந்த வெற்­றி­யின் மூலம் 16 ஆட்­டங்­கள் விளை­யா­டிய நிலை­யில் 27 புள்­ளி­க­ளு­டன் லீக் பட்­டி­ய­லின் ஐந்­தா­வது இடத்­துக்கு யுனை­டெட் முன்­னே­றி­யுள்­ளது.

நான்­கா­வது இடத்­தில் உள்ள வெஸ்ட் ஹேம் குழு­வும் 27 புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது. ஆனால் கோல் வித்­தி­யா­சத்­தில் அது யுனை­டெட்­டை­விட ஒரு படி மேல் இருக்­கிறது.

தோல்­வி­யைத் தழு­விய நார்­விச் 10 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லின் கடைசி இடத்­தில் உள்­ளது.

ரால்ஃப் ரேனிக்­கின் தலை­மை­யின்­கீழ் தொடர்ந்து இரண்­டா­வது வெற்­றியை யுனை­டெட் பதிவு செய்­துள்­ளது.

கோல் போட யுனை­டெட் சிர­மப்­பட்­டது. ஒரு­வ­ழி­யாக நூலி­ழை­யில் வெற்றி பெற்­றா­லும் யுனை­டெட்­டின் தாக்­கு­தல் திறனை மேலும் பட்டை தீட்ட வேண்­டும் என்­பதை இது காட்­டு­கிறது.

மற்­றோர் ஆட்­டத்­தில் உல்வ்ஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்­கில் மான்­செஸ்­டர் சிட்டி வீழ்த்­தி­யது.

கிடைத்த பெனால்டி வாய்ப்­பைக் கோலாக்கி சிட்­டியை வெற்­றிப் பாதை­யில் கொண்டு சென்­றார் ரஹீம் ஸ்டெர்­லிங்.

இதுவே இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் போட்­டி­யில் ஸ்டெர்­லிங் போட்ட 100வது கோல்.

உல்வ்ஸ் குழுவால் இறுதிவரை கோல் போட முடியாமல் போனதால் மூன்று புள்ளிகளை சிட்டி தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது.

தொடர்ந்து ஆறாவது வெற்றியைச் சுவைத்த சிட்டி 38 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.