வலியை அடக்கிக்கொண்டு வெற்றியை பறித்த ஜார்ஜினோவுக்குப் பாராட்டு மழை

வலியை அடக்கிக்கொண்டு வெற்றியை பறித்த ஜார்ஜினோவுக்குப் பாராட்டு மழை

1 mins read
7c1c1d8e-d1f4-41e0-9d7e-8d70a24bbda9
கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி சக ஆட்டக்காரர்களுடன் கொண்டாடிய ஜார்ஜினோ (இடமிருந்து இரண்டாவது). படம்: இபிஏ -

லண்­டன்: காயம் கார­ண­மாக ஏற்­பட்ட வலி­யை­யும் பொருட்­ப­டுத்­தாது ஆட்­டத்­தின் கடை­சிக்

­கட்­டத்­தில் கிடைத்த பெனால்டி வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி பந்தை வலைக்­குள் சேர்த்து செல்­சி­யின் வெற்­றிக்கு முக்­கிய கார­ண­மாக இருந்த ஜார்­ஜி­னோவை அக்­கு­ழு­வின் நிர்­வாகி தாமஸ் டுக்­கல் வெகு­வா­கப் பாராட்­டி­யுள்­ளார்.

ஆட்­டத்­தின் முதல் கோலை லீட்ஸ் போட்­டது. இருப்­பி­னும், மனந்­த­ள­ரா­மல் தொடர்ந்து போரா­டிய செல்சி மேசன் மவுண்ட் மூலம் ஆட்­டத்­தைச் சமன் செய்­தது.

இடை­வே­ளைக்­குப் பிறகு பெனால்டி வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி செல்­சி­யின் இரண்­டா­வ­ரது கோலை ஜார்­ஜினோ போட்­டார்.

ஆனால் ஆட்­டம் முடிய ஏறத்­தாழ ஏழு நிமி­டங்­கள் எஞ்­சி­

இ­ருந்­த­போது லீட்ஸ் குழு­வின் ஜோ கெல்­ஹார்ட் ஆட்­டத்தைச் சமன் செய்­தார். ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­யும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­போது ஆட்­டத்­தின் கடைசி­க்கட்­டத்­தில் செல்­சிக்கு மீண்­டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது.

அதை­யும் கோலாக்கி வெற்­றியை உறுதி செய்­தார் ஜார்­ஜினோ.

ஆட்­டம் 3-2 எனும் கோல் கணக்­கில் செல்­சிக்குச் சாத­க­மாக

முடிந்­தது. மற்­றோர் ஆட்­டத்­தில் சௌத்ஹேம்டன் குழுவை 3-0 எனும் கோல் கணக்­கில் ஆர்­ச­னல் பந்­தா­டி­யது. ஒழுங்­கீ­னம் கார­ண­மாக ஆர்­ச­ன­லின் அணித் தலை­வர் ஔப­ம­யாங் கள­மி­றக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், நிதா­னத்­து­டன் விளை­யா­டிய ஆர்­ச­னல் எதி­ர­ணியை எளி்தில் ஓரங்­கட்டி மூன்று புள்­ளி­க­ளைப் பெற்­றது.