ஹாட்ரிக் வெற்றி பெற்ற தமிழகம்

ஹாட்ரிக் வெற்றி பெற்ற தமிழகம்

1 mins read

திரு­வ­னந்­த­பு­ரம்: 20வது விஜய் ஹசாரே கிரிக்­கெட் போட்­டி­யின் ஒரு­நாள் கிரிக்­கெட் ஆட்­டங்­கள் மும்பை, கவு­காத்தி, திரு­வ­னந்­த­பு­ரம், ஜெய்ப்­பூர் உள்­பட ஏழு நக­ரங்­களில் நடந்து வரு­கின்­றன.

இதில் 'இலிட் பி' பிரி­வில் இடம் பிடித்­துள்ள தமி­ழக அணி, திரு­வ­னந்­த­பு­ரத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த மூன்­றா­வது லீக் ஆட்­டத்­தில் மேற்கு வங்­கா­ளத்­தைச் சந்­தித்­தது.

முத­லில் பந்­த­டித்த தமி­ழக அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 8 விக்­கெட்­டு­க­ளுக்கு 295 ஓட்­டங்­கள் குவித்­தது.

தினேஷ் கார்த்­திக் 87 ஓட்­டங்­களும் பாபா இந்­தி­ர­ஜித் 64 ஓட்­டங்­களும் ஜெ. கவு­சிக் 50 ஓட்­டங்­களும் எடுத்­த­னர்.

கடை­சிக்­கட்­டத்­தில் தமி­ழக அணி­யின் ஷாருக் கான் 32 ஓட்­டங்­கள் எடுத்­தார். மேற்கு வங்­காள அணி 39.1 ஓவர்­களில் 149 ஓட்­டங்­களில் அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது.

இதன்­மூ­லம் தமி­ழக அணி 146 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் அபார வெற்றி பெற்­றது.