நெதர்லாந்தின் முதல் தங்கமகன்

நெதர்லாந்தின் முதல் தங்கமகன்

2 mins read
f8c0f3e2-464b-4e18-b9ee-10f574da488e
தனது பதின்ம வயதிலிருந்தேசாதனை மேல் சாதனையைக் குவித்துவருகிறார்ஃபார்முலா ஒன் உலக விருதை வென்றுள்ள முதல் நெதர்லாந்து வீரரான 24 வயது மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். அபுதாபியில் நடந்த பந்தயத்தின் கடைசி சுற்றில் லுயிஸ் ஹேமில்டனை அபாரமாகத் தாண்டி வெர்ஸ்டாப்பன் விருதைக் கைப்பற்றினார். படம்: ராய்ட்டர்ஸ் -

அபு­தாபி: இவ்­வாண்­டுக்­கான ஃபார்முலா ஒன் உலக விரு­தைக் கைப்­பற்­றி­யுள்ள மேக்ஸ் வெர்ஸ்­டாப்­பன், தனது கன­வுப் பய­ணத்தை நம்­ப­மு­டி­யாத ஒன்று என்று மிக­வும் உணர்ச்­சி­கரமாகக் கூறியுள்ளார். "நான் சிறு­வ­ன­ாக இருந்­த­போது ஃபார்முலா ஒன்று ஓட்­டு­ந­ராக இருக்­க­வேண்­டும் என்­ப­து­தான் எனது கன­வாக இருந்­தது. பந்­த­யங்­களில் வெல்­வ­தைக் கற்­பனை செய்து பார்த்­ததுண்டு. ஆனால் உலக விருதை வென்­று­விட்­டேன் என்று என்­னி­டம் சொல்­லும்­போது அது அபா­ர­மான ஓர் உணர்வு," என்று வெர்ஸ்­டாப்­பன் சொன்­னார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைநகர் அபு­தா­பி­யில் நடை­பெற்ற இப்பரு­வத்­தின் கடைசி பந்­த­யத்­துடைய இறு­திச் சுற்­றில் அதி­வே­க­மா­கத் தனது வாக­னத்தை ஓட்டி லுயிஸ் ஹேமில்­டனை பின்­னுக்­குத் தள்ளி வெற்­றி­கண்­டார், உலக விருதை வென்­றுள்ள முதல் நெதர்­லாந்து வீர­ரான வெர்ஸ்­டாப்­பன். இவ்­வி­ருதை எட்­டா­வது முறை­யாக வென்று சாதனை படைக்­கும் இலக்­கு­டன் இருந்­தார் ஹேமில்­டன்.

"பந்­த­யம் முழு­வ­தும் போரா­டி­னேன், கடைசி சுற்­றில் வெல்­வ­தற்­கான வாய்ப்பு அமைந்­தது, இது அபா­ர­மான ஒன்று," என்­றார் ரெட் புல்­லின் வெர்ஸ்­டாப்­பன். பந்­த­யத்­தில் வெர்ஸ்­டாப்­பன் எடுத்­துக்­கொண்ட நேரம் ஒரு மணி­நே­ரம் 30 நிமி­டம் 17.345 விநாடி. ஹேமில்­டன் இரண்­டா­வ­தாக வந்­தார், மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­த­வர் ஸ்பெ­யி­னைச் சேர்ந்த ஃபெராரி­யின் கார்­லோஸ் சாய்ன்ஸ்.

இதற்­கி­டையே, பந்­த­யத்­திற்கு ஒரு மணி­நே­ரத்­திற்­குப் பிறகு ஹேமில்­ட­னின் மெர்­சிடிஸ் குழு இரண்டு எதிர்ப்புகளை முன்­வைத்­தது. பந்­த­யத்­தின் கடைசித் தரு­ணங்­களில் பாது­காப்பு வாக­னம் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது விளை­யாட்டு விதி­மு­றை­களை மீறு­வ­தா­கும் என்று மெர்­சிடிஸ் கூறி­யது. பாது­காப்பு வாக­னம் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­போ­து­தான் வெர்ஸ்­டாப்­பன் ஹேமில்­ட­னைத் தாண்­டி­னார் என்­பது அதன் வாதம். மெர்­சிடிஸின் எதிர்ப்­பு­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆனால், வெர்ஸ்­டாப்­ப­னின் வெற்­றிக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தாக மெர்­சிடிஸ் தெரி­வித்­தது.