தொடர்ந்து சிறப்பாக ஆட சிரமப்படும் வெஸ்ட் ஹேம்

தொடர்ந்து சிறப்பாக ஆட சிரமப்படும் வெஸ்ட் ஹேம்

1 mins read

பர்ன்லீ (இங்­கி­லாந்து): இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் லிவர்­பூல், செல்சி போன்ற பெரிய அணி­களை வென்­றா­லும் சாதா­ர­ண­மா­ன­தா­கக் கரு­தப்­படும் அணி­களை வெல்ல சற்று சிர­மப்­ப­டு­கிறது வெஸ்ட் ஹேம் யுனை­டெட். தற்­போது லீக் பட்­டி­ய­லில் நான்­காம் இடத்­தில் உள்ள வெஸ்ட் ஹேம், பட்­டி­ய­லில் 18வது இடத்­தில் உள்ள பர்ன்­லீ­யு­டன் கோலின்றி சம­நிலை கண்­டது.

"இதே நிலை­யில் தொடர்ந்து இருக்­க­வேண்­டு­மா­னால் சில விளை­யாட்­டா­ளர்­கள் இதற்கு முன் விளை­யா­டி­ய­தைப் போலவே சிறப்­பாக ஆட­வேண்­டும்," என்று வெஸ்ட் ஹேம் நிர்­வாகி டேவிட் மோயெஸ் கூறி­னார்.

மற்ற ஆட்டங்களில் நியூக்­கா­சல் யுனை­டெட்டை 4-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்தியது லெஸ்­டர் சிட்டி, எவர்ட்­டனை 3-1 எனும் கோல் கணக்­கில் ெவன்றது கிரிஸ்­டல் பேலஸ்.