குறைகூறலை நிறுத்திய வீரர்கள்

குறைகூறலை நிறுத்திய வீரர்கள்

2 mins read
2c67ca1e-9e70-41e3-aaca-12188e346610
லீட்ஸ் யுனைடெட்டிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மூன்றாவது கோலைப் போடுகிறார் கெவின் டி பிரோய்ன (வலது). படம்: ராய்ட்டர்ஸ் -

மான்­செஸ்­டர்: இந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பரு­வத்­தின் முக்­கி­ய­மான கட்­டத்­தில் அபா­ர­மாக ஆடத் தொடங்­கி­யுள்­ளது, கடந்த சில வாரங்­க­ளாக சுமா­ராக ஆடி வென்று­வந்த மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்து அணி. மேலும், அண்­மைக் கால­மாக சற்று களை­யி­ழந்த இவ்­வ­ணி­யின் கெவின் டி பிரோய்ன், ஜாக் கிரீ­லிஷ் போன்ற சில நட்­சத்­தி­ரங்­கள் புத்­து­யிர் பெற்­றுள்­ள­னர்.

லீட்ஸ் யுனை­டெட் அணியை 7-0 எனும் கோல் கணக்­கில் சுக்கு நூறாக்­கி­யது சிட்டி. இந்த ஏழு கோல்­களில் இரண்­டைப் போட்­டார் டி பிரோய்ன. "கடி­ன­மாக உழைத்து முடிந்­த­வரை விரை­வில் மீண்­டு­வருவதை மட்­டும்­தான் என்­னால் செய்­ய­மு­டிந்­தது," என்று பிடி ஸ்போர்ட் ஊடகத்­தி­டம் கூறி­னார் நீண்ட இடை­வே­ளைக்­குப் பிறகு சிறப்பாக ஆடிய டிபி­ரோய்ன.

"இப்­ப­ரு­வத்­தின் தொடக்­கத்­தில் அவர் சிர­மப்­பட்­ட­தால் படிப்­ப­டி­யாக தேறி­வ­ரு­வ­தைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்கிறது," என்று சிட்டி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா டிபி­ரோய்­ன­வைப் பற்­றிக் கூறி­னார். "முக்­கி­ய­மான ஆட்­டங்­களில் (டி பிரோய்னவால்) தனது முழு ஆற்­றலை வெளிப்­ப­டுத்­த­ முடியவில்லை, மீண்­டு­வர ஆரம்­பித்­த­போது அவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. இனி நீண்ட காலத்­திற்கு அவர் தொடர்ந்து சிறப்­பாக ஆடு­வார் என்ற நம்­பிக்­கை­யைக் கொண்­டுள்­ளேன், ஏனென்­றால் அவர் எங்­க­ளுக்­குத் தேவை, நமக்கு மிக­ மிக முக்­கி­ய­மான விளை­யாட்­டா­ளர்," என்­றார் கார்­டி­யோலா. சிட்டி அணி­யில் மீண்­டும் தொடர்ந்து இடம்­பெற டி பிரோய்ன போரா­ட­வேண்­டும் என்று சில நாள்­களுக்கு முன்­பு­தான் கார்­டி­யோலா கூறி­யி­ருந்­தார்.

இப்­ப­ரு­வம் தொடங்­கு­வ­தற்கு முன் 100 மில்­லி­யன் பவுண்ட் தொகைக்கு வாங்­கப்­பட்ட கிரீ­லி­ஷும் இவ்­வாட்­டத்­தில் ஒரு கோலைப் போட்­டார். இதற்கு முன் அவ­ரால் எதிர்­பார்ப்­பு­க­ளை நிறைவு ­செய்ய முடி­ய­வில்லை. சிட்­டி­யின் இதர கோல்­க­ளைப் போட்­ட­வர்­கள் ஃபில் ஃபோடன், ரியாட் மாஹ்­ரெஸ், ஜான் ஸ்டோன்ஸ், நேத்­தன் எக்கே. தன்­னைப் பற்­றிக் குறை சொல்­பவர்­க­ளுக்­குத் தொடர்ந்து பாடம் புகட்­டி­வ­ரு­கிறது சிட்டி.

மற்­றொரு லீக் ஆட்­டத்­தில் ஸ்டீ­வன் ஜெரார்ட் நிர்­வ­கிக்­கும் ஆஸ்­டன் வில்லா, நோரிச் சிட்­டியை 2-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது. ஜேக்கப் ரேம்சி, ஒலி வாட்கின்ஸ் ஆகியோர் கோல்களைப் போட்டனர். லில்­லா­வைச் சிறப்­பாகச் செய்ய வைக்­கும் இலக்­கு­டன் இயங்கு­கிறார், ஸ்காட்­லாந்­தின் கிளாஸ்கோ ரேஞ்­சர்ஸ் அணி­யைப் பெரி­தும் மேம்­ப­டுத்­திய ஜெரார்ட்.

லீட்ஸ் யுனைடெட்டிற்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி தனது முழு ஆற்றலைக் காட்டியது