இரு அணிகள் தரும் போட்டி

இரு அணிகள் தரும் போட்டி

2 mins read
90a137ae-75d2-4bff-8461-626da0bf32b6
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தை வகிக்கிறது லிவர்பூல். படம்: இபிஏ -
multi-img1 of 2

லிவர்­பூல்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் முத­லி­டத்தை வகிக்­கும் மான்­செஸ்­டர் சிட்­டிக்­குக் கடும் போட்டி தரு­கின்­றன பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் உள்ள லிவர்­பூல், மூன்­றாம் இடத்தை வகிக்­கும் செல்சி. இவ்­விரு அணி­களும் இன்று பின்­னி­ரவு ஆட­வுள்­ளன. லிவர்­பூல், நியூகாசல் யுனை­டெ்­டைச் சந்­திக்­கிறது. எவர்ட்­ட­னு­டன் மோது­கிறது செல்சி.

சென்ற பரு­வம் அதிகம் சிரமப்­பட்ட லிவர்­பூல், இம்­முறை பெரி­தும் மேம்­பட்­டுள்­ளது. எவ்­வ­ளவு பெரிய அணி­யை­யும் சாதா­ர­ண­மா­கத் தோற்கடிக்கூடிய ஆற்­றல் இத­னி­டம் உள்­ளது.

கோல்­க­ளைக் குவித்த வண்­ணம் இருந்த லிவர்­பூல், கடந்த இரண்டு பிரி­மி­யர் லீக் ஆட்­டங்­களில் 1-0 எனும் கோல் கணக்­கில்­தான் வென்­றது. எனி­னும், இத­னி­டம் ஒரு வகை கம்­பீ­ரம் தென்­ப­டு­கிறது. மேலும், லிவர்­பூல் அதிக கோல்­களை விடு­வ­தும் இல்லை.

அதே வேளையில், செல்­சி­யின் நிலை சற்று வித்தியாசமானது. கடந்த சில வாரங்­க­ளா­கத் தடு­மாறிய செல்சி, அதிக கோல்­களை விட்­டுக்­கொ­டுத்­து­வ­ரு­கிறது. எனி­னும், லீட்ஸ் யுனை­டெட்­டிற்கு எதி­ரான சென்ற லீக் ஆட்­டத்­தில் ஒரு வழி­யாக வெற்­றி­ய­டைந்து மீண்­டு­வந்­தது.

"இது மிக­வும் சவா­லான ஆட்­ட­மாக அமைந்­த­தால் நமது ஆற்­றல், நாம் போட்ட முயற்சி இரண்­டை­யும் பொறுத்­த­வ­ரை­யில் நான் மகிழ்ச்சி­யடை­கி­றேன்," என்று அவ்­வாட்­டத்­திற்­குப் பிறகு செல்­சியை நினைத்­துப் பெரு­மைப்­பட்­டார் இதன் நிர்­வாகி தாமஸ் டூக்­கல்.

"இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள், இருந்தாலும் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் வெற்றி கோலை அடித்தது சற்று அதிர்ஷ்டவசமானதுதான்," என்றும் டூக்கல் குறிப்பிட்டார். லீட்ஸை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது செல்சி.

லீக் பட்­டி­ய­லில் தற்­போது இரண்­டாம் இடத்தை வகிக்­கிறது லிவர்­பூல், மூன்­றாம் இடத்­தில் உள்­ளது செல்சி. லிவர்­பூல், நியூகா­சலை வென்­றால் சிட்­டிக்கு ஒரு புள்ளி வித்­தி­யா­சத்­தில் பின்­னால் இருக்­கும். எனி­னும், லிவர்­பூல் தோல்வி­யடைந்து எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி வென்­றால், இது இரண்டு புள்­ளி­கள் வித்­தி­யா­சத்­தில் இரண்­டாம் இடத்­திற்கு முன்­னே­றும், லிவர்­பூல் மூன்­றாம் இடத்­திற்கு விழும். இரண்­டில் எந்த அணி தோல்­வி­ய­டைந்­தா­லும் லீக் கிண்­ணத்தை வெல்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறை­யும்.

லிவர்பூல் சந்திக்கவுள்ள நியூகாசல், செல்சியுடன் மோதவுள்ள எவர்ட்­டன் ஆகிய இரண்டும் தற்போது சிர­மப்­பட்­டுக்­கொண்­டிருக்­கின்­றன.