மன வலியுடன் விடைபெறும் அகுவேரோ

மன வலியுடன் விடைபெறும் அகுவேரோ

1 mins read
11166e52-fe61-49d4-87db-41751c9b900e
கண்ணீருடன் விடைபெற்றார் அகுவேரோ. படம்: ராய்ட்டர்ஸ் -

பார்­சி­லோனா: இதயக் கோளாற்­றுக் கார­ண­மாக தொழில்­மு­றைக் காற்­பந்­தி­லி­ருந்து ஓய்­வு­பெ­று­வதாக அறி­வித்­துள்­ளார் அர்­ஜென்­டினா நட்­சத்­தி­ரம் செர்­ஜியோ அகு­வேரோ. தான் ஆடிய 786 ஆட்­டங்­களில் 427 கோல்­க­ளைப் போட்­டுள்­ளார் முன்னிலை வீரரான இவர்.

கடந்த அக்­டோ­பர் மாதம் 30ஆம் தேதி­யன்று ஸ்பா­னிய லீக்­கில் அலா­வெ­ஸுக்கு எதி­ரா­கத் தனது புதிய அணி­யான பார்­சி­லோ­னா­விற்கு ஆடும்­போது அகு­வே­ரோ­விற்கு நெஞ்சு வலி ஏற்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து சிகிச்­சைக்காக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். அதற்குப் பிறகு 33 வயது அகு­வேரோ ஓய்­வு­பெ­றப்­போ­வ­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­வந்­தன.

சென்ற பரு­வம்­வரை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் மான்­செஸ்­டர் சிட்­டிக்கு ஆடி­னார் அகு­வேரோ. 2011ஆம் ஆண்டு சிட்­டி­யில் சேர்ந்­தார். அவ­ரின் வருகை, சிட்டி அபா­ர­மான அணி­யாக உரு­வெ­டுப்­ப­தற்கு முக்­கி­யப் பங்கு வகித்­தது என்றால் அது மிகை­யா­காது.

உல­கின் ஆகச் சிறந்த விளை­யாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரா­கக் காற்­பந்து வர­லாற்­றில் இடம்­பி­டித்­துள்­ளார் அகு­வேரோ.