சுசுகி கிண்ணம்: கம்போடியாவுக்கு முதல் வெற்றி

சுசுகி கிண்ணம்: கம்போடியாவுக்கு முதல் வெற்றி

1 mins read

சிங்­கப்­பூர்: தென்­கி­ழக்­கா­சி­யக் காற்­பந்து அணி­க­ளுக்­கான இவ்­வாண்­டின் சுசுகி கிண்­ணப் போட்டி­யில் முதன்­மு­றை­யாக வென்­றுள்­ளது கம்­போ­டியா. 'பி' பிரி­வில் லாவோஸை 3-0 எனும் கோல் கணக்­கில் கம்போடியா வென்­றது.

நேற்று முன்தினம் 'ஏ' பிரி­வில் திமோர் டெஸ்­டேயை 2-0 எனும் கோல் கணக்­கில் வென்று 9 ஆண்டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு இப்­போட்­டி­யின் அரை­யி­றுதிச் சுற்­றுக்­குத் தகு­தி­பெற்­றது சிங்­கப்­பூர். இப்­பி­ரி­வில் தாய்­லாந்­தும் பிலிப்­பீன்ஸை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்று அரை­யி­று­திச் சுற்றுக்கு முன்­னே­றி­யது.

நாளை மறு­நாள் சிங்­கப்­பூ­ரும் தாய்­லாந்­தும் மோதும். வெற்­றி­பெ­றும் அணி 'ஏ' பிரி­வில் முத­லி­டத்­தைப் பிடிக்­கும்.