ஆஷஸ் தொடர்: மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள்

ஆஷஸ் தொடர்: மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள்

1 mins read

அடி­லெய்ட்: ஆஷஸ் கிரிக்­கெட் தொட­ரில் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரண்­டாம் டெஸ்ட் ஆட்­டத்­திற்­காக ஜேம்ஸ் ஆண்­டர்­சன், ஸ்டு­வர்ட் புரோட் ஆகி­யோர் இங்­கி­லாந்­தின் 12-பேர் அணி­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். டெஸ்ட் ஆட்­டங்­களில் இங்­கி­லாந்­துக்கு ஆக அதிக விக்­கெட்­டு­களை வெளி­யேற்­றிய பெரு­மை­கொண்ட இவ்­வி­ரு­வ­ரும் இத்­தொ­ட­ரின் முதல் ஆட்­டத்­தில் இடம்­பெ­ற­வில்லை.

முதல் ஆட்­டத்­தில் 13 ஓவர்­களில் 102 ஓட்­டங்­களை விட்ட இங்­கி­லாந்­தின் ஜாக் லீச்­சும் அணி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். இங்­கி­லாந்து, ஆஷஸ் தொட­ரின் முதல் ஆட்­டத்­தைத் தோல்வி­யடைந்த பிற­கும் கிண்­ணத்தை வென்று 66 ஆண்­டு­கள் ஆகி­விட்டன. மேலும், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இதற்கு முன் தான் ஆடிய 11 டெஸ்ட் ஆட்­டங்­களில் இங்­கி­லாந்து வெற்­றி­பெ­ற­வில்லை. பெரும் சவாலை எதிர்­கொள்ள மனத்­தைத் திடப்­ப­டுத்தி வெற்­றி­கா­ணும் இலக்­கைக் கொண்­டுள்­ளது இவ்­வணி.

காய­ம­டைந்­துள்ள ஆஸ்­தி­ரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்­வுட்­டின் இடத்தை ஜை ரிச்­சர்ட்­சன் எடுக்­க­வுள்­ளார். இதோடு, பிரிஸ்­பனில் நடை­பெற்ற முதல் ஆட்­டத்­தில் காய­முற்ற பென் ஸ்டோக்ஸால் இரண்­டாம் ஆட்­டத்­தில் பங்­கேற்­க­மு­டி­யும் என்பது உறு­தி­செய்­யப்­பட்டுள்­ளது.

பக­லி­ரவு ஆட்­ட­மாக அரங்­கே­ற­வுள்ள இந்த ஆஷஸ் தொட­ரின் இரண்­டா­வது ஆட்­டம், அடி­லெய்ட் நக­ரில் இன்று மதி­யம் தொடங்­கும். இவ்­வாட்­டத்­தில் இளஞ்­சி­வப்­புப் பந்து பயன்­ப­டுத்­தப்­படும். கடந்த நான்கு பக­லி­ரவு ஆட்­டங்­களில் மூன்­றில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது இங்­கி­லாந்து.