கிருமித்தொற்றால் லீக் ஆட்டங்கள் பாதிப்பு

கிருமித்தொற்றால் லீக் ஆட்டங்கள் பாதிப்பு

1 mins read

பர்ன்லீ (இங்­கி­லாந்து): விளை­யாட்­டா­ளர்­கள், இதர பணி­யா­ளர்­கள் என சில இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து அணி­களில் பல­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தால் பல ஆட்­டங்­கள் ஒத்தி­வைக்­கப்­பட்­டுவருகின்றன. பர்ன்லீயும் வாட்­ஃபர்ட்­டும் நேற்று முன்­தி­னம் மோத­வி­ருந்த ஆட்­டம், அதற்கு முன் மான்­செஸ்­டர் யுனை­டெட்­டுக்­கும் பிரென்ட்­ஃபர்ட்­டுக்­கும் இடையே நடை­பெ­ற­வி­ருந்த ஆட்­டம், டாட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ரும் பிரைட்­ட­னும் சந்­திக்­க­வி­ருந்த ஆட்­டம் ஆகி­யவை ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி யுனை­டெட்­டில் மேலும் சில­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் எல்லா அணி­களும் பிரச்­சி­னையை எதிர்­கொள்­வ­தாக சில அணி­கள் கூறு­கின்­றன. "நாம் செல்­லும் பாதை­யில் எத்­தனை நாள்­கள் நீடிக்­க­மு­டி­யும் என்­பது தெரி­ய­வில்லை," என்­றார் பிரைட்­டன் நிர்­வாகி கிரா­கம் போர்ட்­டர். வுல்வ்­ஸுக்கு எதி­ரான அதன் ஆட்­டத்­தில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான சில விளை­யாட்­டா­ளர்­கள் இடம்­பெ­ற­வில்லை.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று என்­பது 10 நாள்­க­ளுக்கு மட்­டும் நீடிப்­பது அல்ல, குண­ம­டைந்த பிற­கும் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் உடல் அவ்­வ­ளவு வலு­வாக இருக்­காது. அத­னால் குண­ம­டைந்த பிற­கும் விளை­யாட்­டா­ளர்­க­ளுக்­குக் காய­மடை­யும் வாய்ப்­பு­கள் அதி­கம் உண்டு," என்று ஸ்பர்ஸ் நிர்­வாகி என்­டோ­னியோ கொன்டே கூறி­யி­ருந்­தார். பிரண்ட்­ஃபர்ட் நிர்­வாகி தாமஸ் ஃபிராங்­கும் குரல் கொடுத்­துள்­ளார். இந்­நிலை இன்­னும் எத்­தனை நாள்­க­ளுக்கு நீடிக்­கும் என்று சொல்­ல­மு­டி­யாது. சென்ற பரு­வ­த்திலும் கிட்­டத்­தட்ட இதே கால­கட்­டத்­தில் இப்­பி­ரச்­சினை தலை­தூக்­கி­யது. அப்­போது சில அணி­கள் ஆட்­டங்­களை நிறுத்­தி­வைக்­கு­மாறு வேண்­டின. இறு­தி­யில் பரு­வம் திட்­ட­மிட்ட­படியே நடந்­து­மு­டிந்­தது.