தடுமாறிய நடப்பு வெற்றியாளர்: சூடுபிடித்தது சுசுகி கிண்ணம்

தடுமாறிய நடப்பு வெற்றியாளர்: சூடுபிடித்தது சுசுகி கிண்ணம்

1 mins read
a9743396-f769-46cf-9165-4abad5b94fb6
வியட்னாமும் (சிவப்பு ஆடை) இந்தோனீசியாவும் (பச்சை கலந்த வெள்ளை ஆடை) மோதிய ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்: தென்­கி­ழக்­கா­சி­யா­வின் தேசிய காற்­பந்து அணி­க­ளுக்­கான சுசுகி கிண்­ணப் போட்­டி­யில் இந்­தோ­னீ­சி­யா­வும் நடப்பு வெற்றி­யா­ள­ரான வியட்­னா­மும் மோதிய ஆட்­டம் கோலின்றி சம­நி­லை­யில் முடிந்­தது. இத­னால் 'பி' பிரி­வி­லி­ருந்து வியட்­னாம் அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­று­வது இன்­ன­மும் உறு­தி­யா­க­வில்லை.

இப்­பி­ரி­வில் தற்­போது முத­லி­டத்தை வகிக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வு­டன், வியட்­னாம்,, மலே­சியா ஆகிய இரண்­டுக்­கும் அரை­யிறுதிச் சுற்­றுக்­குச் செல்­லும் வாய்ப்­பு­கள் உள்­ளன.

இந்­தோ­னீ­சியா, வியட்­னாம் இரண்­டும் இப்­பி­ரி­வில் தனது முதல் இரண்டு ஆட்­டங்­களில் வென்­றன. இவ்­வாட்­டத்தை இரண்­டில் ஓர் அணி வென்­றி­ருந்­தால் அது அரை­யி­று­திச் சுற்றுக்குச் செல்­வது உறு­தி­யா­கி­யி­ருக்­கும்.

வியட்­னாம்­தான் வெல்­லும் எனப் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், துடிப்பு­டன் ஆடி­ய­போ­தும் வாய்ப்­பு­க­ளைக் கோலாக்­கத் தவ­றி­யது வியட்னம்ா.

இனி 'பி' பிரி­வின் கடைசி ஆட்­டங்­கள் மிக­வும் விறு­வி­றுப்­பாக அமை­ய­லாம். கம்­போ­டியாவை வென்­றால் வியட்­னாம் அரை­யி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­வி­டும். கம்­போ­டி­யாவை வெல்­வது வியட்­னா­முக்கு சுல­பம் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

மற்றோர் ஆட்டத்தில் இந்தோனீசியாவும் மலேசியாவும் மோதும். இவ்வாட்டத்தில் வெல்லும் அணியும் அரையிறுதிக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

'பி' பிரிவில் தற்போது வியட்னாம் இரண்டாவது இடத்தில் உள்ளது, மலேசியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 'ஏ' பிரிவிலிருந்து தாய்லாந்தும் இப்போட்டியை ஏற்று நடத்தும் சிங்கப்பூரும் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன.