ஃபார்முலா ஒன்: மெர்சிடிஸ் மேல்முறையீடு செய்யாது

ஃபார்முலா ஒன்: மெர்சிடிஸ் மேல்முறையீடு செய்யாது

1 mins read

அபு­தாபி: ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் தலை­ந­கர் அபு­தா­பி­யில் நடை­பெற்ற ஃபார்முலா ஒன் பந்­தய முடி­வுக்கு எதி­ரா­கத் தான் மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தில்லை என்று லூயிஸ் ஹேமில்­ட­னின் மெர்­சி­டிஸ் குழு அறி­வித்­துள்­ளது. மேலும், பந்­த­யத்­தில் வென்று ஃபார்முலா ஒன் உலக விருதை முதன்­மு­றை­யாக வென்ற மேக்ஸ் வெர்ஸ்­டாப்­ப­னுக்­கும் அவ­ரின் குழு­வான ரெட் புல்­லுக்­கும் மர்­சி­டிஸ் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற பந்­த­யத்­தின் கடைசி சுற்­றில் வெர்ஸ்­டாப்­பன், ஹேமில்­ட­னைத் தாண்­டிச் சென்று உலக விருைதைக் கைப்­பற்­றி­னார். அதற்­குப் பிறகு விதி­மு­றை­கள் சரி­யா­கப் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்று மெர்­சி­டிஸ் இரண்டு முறை எதிர்ப்பு தெரி­வித்­தது. ஃபார்முலா ஒன் அதை நிரா­க­ரித்­தது. முடி­வுக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்­வது குறித்து மெர்­சி­டிஸ் பரி­சீ­லித்­தது. சர்ச்­சைக்­கு­ரிய இப்­பந்­த­யம் நடை­பெற்ற விதத்­தைக் கூர்ந்து ஆரா­யப்­போ­வ­தாக அனைத்­து­லக மோட்டார்­பந்­த­யச் சம்­மே­ள­னம் தெரி­வித்­தது.