லண்டன்: இவ்வாண்டின் ஃபார்முலா ஒன் உலக விருதை வெல்லத் தவறியபோதும் பிரிட்டிஷ் வீரரான லூயிஸ் ஹேமில்டனை அந்நாட்டின் அரசு கௌரவப் பட்டம் வழங்கி அங்கீகரித்துள்ளது. 'நைட்ஹூட்' எனப்படும் அரசு மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் இனி 'சர்' லூயிஸ் ஹேமில்டன் என்று அழைக்கப்படுவார்.
வாகனப் பந்தய விளையாட்டிற்கு ஆற்றிய பங்கிற்காக 36 வயது ஹேமில்டன் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு தனது முதல் ஃபார்முலா ஒன் விருதை வென்றார் இவர். ஏழு முறை ஃபார்முலா ஒன் உலக விருதை வென்றுள்ளார். எட்டாவது முறையாக விருதை வென்று சாதனை படைக்கமுடியாத வருத்தத்தைப் போக்கியது இந்த அங்கீகாரம்.

