தர­வ­ரி­சை­யில் சறுக்­கல்; விரக்­தி­யில் செல்சி

தர­வ­ரி­சை­யில் சறுக்­கல்; விரக்­தி­யில் செல்சி

1 mins read

லண்டன்: கொரோனா கொள்­ளை­நோய் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழுக்­களை பந்­தா­டி­வ­ரும் நிலை­யில், நேற்று அதி­காலை எவர்ட்­ட­னு­ட­னான ஆட்­டத்­தில் செல்சி சறுக்­கி­யது. இத­னால், பல வாரங்­க­ளாக தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் முன்­னணி வகித்த அந்த அணி தற்­பொ­ழுது மூன்­றாம் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், முதல் நிலை­யில் இருக்­கும் மான்­செஸ்­டர் சிட்டி அணி­யை­விட நான்கு புள்­ளி­கள் குறை­வாக பெற்­றுள்­ளது.

நேற்­றைய ஆட்­டத்­தில் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­க­ளான ரொமேலு லுக்­காகு, டிமோ வெர்­னர் ஆகி­யோ­ரு­டன் கேலம் ஹட்சன் ஒடோய் என்ற வீர­ரும் கொரோனா பாதிப் புக்கு ஆளாகி விளை­யாட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. மேலும் சில வீரர்­களும் காயம், கொரோனா கார­ண­மாக விளை­யாட முடி­யாத நிலை­யில் எவர்ட்­டன் தற்­காப்பு அரணை தகர்க்க செல்சி தடு­மா­றி­யது. பின்­னர், எப்­ப­டியோ சமா­ளித்து இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் மேசன் மௌண்ட் என்ற வீரர் போட்ட கோலால் முன்­னிலை பெற்­றது. ஆனால், தற்­காப்­பில் கவ­ன­மின்றி விளை­யா­டி­ய­தால், கடைசி 16 நிமி­டங்­கள் இருக்­கும் நிலை­யில் எவர்ட்­டடன தற்­காப்பு வீர­ரான ஜேரட் பிரன்த்­வெய்ட், எவர்ட்­டன் குழு­வில் விளை­யாட ஆரம்­பித்­த­தற்கு அடை­யா­ள­மாக, கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார்.