துடிப்பின் உச்சத்தில் ஆர்சனல்

துடிப்பின் உச்சத்தில் ஆர்சனல்

2 mins read
22c70584-7b7b-4a74-8c68-2cd2fd66115a
லீட்ஸ் யுனைடெட்டிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆர்சனலின் நான்காவது கோலைப் போட்ட பிறகு தனது அணியின் இதர வீரர்கள் சிலருடன் கொண்டாடும் எமில் ஸ்மித் ரோ (நடுவில்). 4-1 எனும் கோல் கணக்கில் இந்த ஆட்டத்தை வென்றது ஆர்சனல். படம்: ராய்ட்டர்ஸ் -

லீட்ஸ்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் பல அணி­கள் அமை­தி­யாக இருக்­க­வேண்­டிய கட்­டா­யம் இருந்­து­வ­ரும் வேளை­யில் மெல்ல மெல்ல மேம்­பட்­டு­வ­ரு­கிறது இளம் விளை­யாட்­டா­ளர்­க­ளின் உற்­சா­கத்­தால் துடிப்­பு­டன் ஆடும் ஆர்­ச­னல் காற்­பந்து அணி. கடந்த இரண்டு லீக் ஆட்­டங்­களில் ஆறு கோல்­க­ளைப் போட்டு வென்றுள்­ளது ஆர்­ச­னல்.

பிரி­மி­யர் லீக்­கில் சில அணி­களில் விளை­யாட்­டா­ளர்­கள் உள்­ளிட்ட பலர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி­யி­ருக்­கின்­ற­னர். அத­னால் வேறு வழி­யில்­லா­மல் பல ஆட்­டங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

இந்த நில­வ­ரம் குறித்து இன்று பேச்சு­வார்த்தை நடை­பெ­ற­வி­ருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தன்னை மேம்படுத்திக்கொள்வதில் முழு கவனம் செலுத்திவருகிறது ஆர்சனல். நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்­க­ளைப் போட்­டார் இளம் நட்­சத்­தி­ரம் கேப்­ரி­யல் மார்ட்­டி­னெல்லி. இது­வரை இவரை விளை­யா­டு­வ­தில் பொறுமை காத்­தது நல்ல பல­ன­ளித்­துள்­ளது என்­றார் ஆர்­ச­னல் நிர்­வாகி மிக்­கெல் அர்ட்­டெட்டா. "விளை­யாட்­டா­ளரை தின­மும் கவ­னிக்­கும்­போது எப்­படி, எப்­போது அவ­ரைக் கள­மி­றக்­கி­னால் சிறப்­பாக ஆடு­வார் என்­பது தெரி­ய­வ­ரும், அதைப் பரு­வம் முழு­வ­தும் தொட­ர­வைக்­க­வேண்­டும்," என்று அர்ட்­டெட்டா கூறி­னார். கடந்த சில வாரங்­க­ளாக அபா­ர­மாக விளை­யா­டி­வ­ரு­கி­றார் பிரே­சி­லைச் சேர்ந்த 20 வயது வீர­ரான மார்ட்­டி­னெல்லி.

ஆர்­ச­ன­லின் இதர இரண்டு கோல்­களைப் போட்­ட­வர்­கள் எமில் ஸ்மித் ரோ, புக்­காயோ சாக்கா. லீக் பட்­டி­ய­லில் தற்­போது நான்­காம் இடத்­தில் உள்­ளது ஆர்­ச­னல். அவ்­வி­டத்­தில் இருந்த வெஸ்ட் ஹேம் யுனை­டெட்­டை­யும் சென்ற வாரம் வென்­றது.

தொடர்ந்து சிறப்­பாக ஆட சிர­மப்­பட்­டா­லும் பெரி­தும் மேம்­பட்டு தனது ரசி­கர்­களை இன்ப அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­வ­ரு­கிறது, இப்­ப­ரு­வத்­தின் முதல் மூன்று லீக் ஆட்­டங்­களில் தோல்­வி­யடைந்து திக்­கு­முக்­கா­டிய ஆர்­ச­னல்.