தாய்லாந்து தந்த வலி

தாய்லாந்து தந்த வலி

1 mins read

சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான சுசுகி கிண்ணப் போட்டியில் சிங்கப்பூரை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது தாய்லாந்து. 'ஏ' பிரிவிலிருந்து இவ்விரு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது ஏற்கெனவே உறுதியானது. இவ்வாட்டத்தை வென்றதால் இப்பிரிவில் சிங்கப்பூருக்குப் பதிலாக முதலிடத்தைப் பிடித்தது தாய்லாந்து.

இதற்கிடையே, காயமடைந்ததால் சிங்கப்பூரின் தற்காப்பு விளையாட்டாளரான ஷாக்கிர் ஹம்சா இனி இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.