சிங்கப்பூர்: சுசுகி கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் இடம்பெறும் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தை நேரில் காண விரும்புவோருக்கு நுழைவுச்சீட்டுகள் நேற்று முதல் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
முதல் சுற்று ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கியோரால் மட்டுமே அரையிறுதியாட்டத்துக்கு நுழைவுச்சீட்டுகளை இணையம்வழி வாங்கமுடியும். மற்றவர்கள் தேசிய விளையாட்டாரங்கின் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படும் கூடத்தில் வாங்கலாம். நுழைவுச்சீட்டுகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைக் காண்பிக்கவேண்டும். சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே இந்த நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.
தாய்லாந்து ஆடவுள்ள அறையிறுதி ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டுகள் நாளை காலை ஒன்பது மணி முதல் விற்பனைக்கு விடப்படும்.
fas.org.sg/tickets எனும் இணைய முகவரி அல்லது +6531588588 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். ஒரு நுழைவுச்சீட்டின் விலை அதிகபட்சமாக 40 வெள்ளி. 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கான நுழைவுச்சீட்டின் விலை 15 வெள்ளி.

