பூப்பந்து இறுதியாட்டத்தில் சிங்கப்பூர், இந்தியா

1 mins read
c1173bae-cff1-4947-9ed3-f1a6a2bffaaa
இறுதியாட்டத்தில் மோதிய இந்தியாவின் ஸ்ரீகாந்த் (இடது), சிங்கப்பூரின் லோ (வலது). படங்கள்: இபிஏ -
multi-img1 of 2

சிங்­கப்­பூர்: இன்­றைய தமிழ் முரசு அச்­சுக்கு சென்ற நேரத்­தில் தான் படைத்த வர­லாற்­றையே முறி­ய­டித்து அடுத்த கட்­டத்­திற்­குச் செல்­லும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார் சிங்­கப்­பூ­ரின் பூப்­பந்து வீரர் லோ கியென் இயூ. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி லோவும் இந்­தி­யா­வின் கிடிம்பி ஸ்ரீகாந்­தும் உலக பூப்­பந்துப் போட்­டி­யில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வின் இறு­தி­யாட்­டத்­தில் மோதிக்­கொண்­டி­ருந்­த­னர்.

இப்­போட்­டி­யின் இறு­தி­யாட்­டத்­திற்கு சிங்­கப்­பூர் முதன்­மு­றை­யாக முன்­னே­றி­யது. லோ வெள்­ளிப் பதக்­கம் வெல்­வதே சாத­னை­தான். தங்­கம் வென்­றால் சிங்­கப்­பூ­ருக்கு இரட்­டிப்பு இன்­பம்.

ஆண்­கள் பூப்­பந்­தில் உல­கத் தர­வ­ரி­சை­யில் 14ம் இடத்தை வகிக்­கி­றார் இந்­தி­யா­வின் ஸ்ரீகாந்த். 2018 காமன்­வெல்த் விளை­யாட்டு­களில் இடம்பெற்ற ஆட்டத்தில் இவர் லோவை வென்றார்.