போர் முரசு கொட்டும் சிங்கப்பூர், இந்தோனீசியா

போர் முரசு கொட்டும் சிங்கப்பூர், இந்தோனீசியா

3 mins read
ea1601af-4a0e-4987-9cf1-7b2d369287d0
அரையிறுதியில் சிறப்பாக விளையாடி, வெற்றி பெற்று இறுதிச் சுற்று ஆட்டத்துக்குத் தகுதி பெறும் முனைப்புடன் இருக்கும் சிங்கப்பூர் வீரர்கள் மற்றும் இந்தோனீசிய அணியினர் (வலது). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்­கப்­பூர்: ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியின் அரை

­யி­றுதி ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் இன்றிரவு 8.30 மணிக்குக் களம் இறங்­கு­கிறது. இந்­தோனீ­சி­யா­வுக்கு எதி­ரான இந்த அரை­யி­று­திச் சுற்று முதல் ஆட்­டம் தேசிய விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­பெ­று­கிறது.

அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்­சி­யைத் தந்­தா­லும் இறு­திச் சுற்று ஆட்­டத்­துக்கு முன்­னேற, முதல் சுற்­றில் செயல்­பட்­ட­தை­விட மேலும் சிறப்­பாக விளை­யாட வேண்­டும் என

சிங்­கப்­பூர் அணித் தலை­வர் ஹாரிஸ் ஹருண் தெரி­வித்துள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற தமது அணி முனைப்புடன் இருப்பதாக அவர் கூறினார். இப்­போட்­டி­யில் சிங்­கப்­பூர் குழு அதன் முதல் ஆட்­டத்­தில் மியன்­மாரை 3-0 எனும் கோல் கணக்­கில் பந்­தா­டி­யது.

அத­னைத் தொடர்ந்து, பிலிப்­பீன்­சுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் 2-1 எனும் கோல் கணக்­கில் அது வாகை சூடி­யது. திமோர் லெஸ்­டேயை 3-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­திய சிங்­கப்­பூர், முதல் சுற்­றின் இறுதி ஆட்­டத்­தில் தாய்­லாந்­தைச் சந்­தித்­தது. அந்த ஆட்­டத்­தில் தோல்­வி­யின் பிடி­யில்

சிங்­கப்­பூர் சிக்­கிக்­கொண்­டது. 2-0 எனும் கோல் கணக்­கில் தாய்­லாந்­தி­டம் தோல்வி அடைந்­த­தால் 'ஏ' பிரி­வில் முதல் இடத்­துக்­குப் பதி­லாக இரண்­டா­வது இடத்தை அது பிடித்­தது.

இதன் கார­ண­மாக 'பி' பிரி­வில் முதல் இடத்­தைப் பிடித்த இந்­தோனீ ­சி­யா­வு­டன் சிங்­கப்­பூர் அரை­யி­று­தி­ யில் மோது­கிறது. இந்­தோ­னீ­சியா அதன் முதல் சுற்று ஆட்­டங்­களில் சக்­கைப்­போடு போட்­டது. மூன்று வெற்­றி­கள், ஒரு சம­நி­லை­யு­டன் பத்து புள்­ளி­களை அது பெற்­றது. வியட்­னா­மும் பத்து புள்­ளி­கள் பெற்­றது. இருப்­பி­னும், முதல் சுற்­றில் கோல் மழை பொழிந்த இந்­தோ­னீ­சியா, வியட்­னா­மை­விட அதிக கோல்­கள் போட்டு கோல் வித்­தி­யா­சத்­தில் 'பி' பிரி­வில் முத­லி­டத்­தைப் பிடித்­தது.

திமோர் லெஸ்­டே­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் குழு­வின் செயல்­பாடு திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை என்று பர­வ­லா­கப் பேசப்­பட்­டது. இதைச் சரி­செய்து தங்­கள் திறனை வெளிப்­ப­டுத்­தும் நோக்­கு­டன் தாய்­லாந்­துக்கு எதி­ரான ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் ஆட்டக் காரர்கள் கள­மி­றங்­கி­னர். ஆனால் அந்த ஆட்­டத்­தில் சிங்­கப்­பூ­ருக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

இந்­தோ­னீ­சி­யா­வுக்கு எதி­ரான நாளைய ஆட்­டத்­தி­ல் வெற்­றிப் பாதைக்கு மீண்­டும் திரும்ப

வேண்­டும் என்ற வேட்­கை­யு­டன்

சிங்­கப்­பூர் ஆட்­டக்­காரர்­கள்

ஆவ­லு­டன் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

"முதல் இரண்டு ஆட்­டங்­க­ளுக்­குப் பிறகு எங்­க­ளு­டைய ஆட்­டம் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. ஆனால் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு அரை­யி­று­திச் சுற்­றுக்கு நாங்­கள் தகுதி பெற்­றுள்­ளோம். இருப்பினும், இந்­தோ­னீ­சி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டம் சவால்­மிக்­க­தாக அமை­யும் என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும்," என்­றார் 31 வயது ஹாரிஸ். இதற்­கி­டையே, முதல் சுற்­றில் தனது கடைசி ஆட்­டத்­தில் மலே­சி ­யாவை 4-1 எனும் கோல் கணக்­கில் புரட்டி எடுத்த இந்­தோ­னீ­சியா, சிங்­கப்­பூ­ரை­யும் தோற்

­க­டித்­து­விட முடி­யும் என்ற நம்­பிக்­கை­யு­டன் உள்­ளது. இருப்­பி­னும், சொந்த மண்­ணில் விளை­யா­டு­வது சிங்­கப்­பூர் அணிக்­குச் சாத­க­மாக அமை­யும் என்று அக்­கு­ழு­வின் தென்­கொ­ரி­யத் தலை­மைப்

பயிற்­று­விப்­பா­ளர் ஷின் டே யோங் கூறி­னார்.

"மலே­சி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டத்தை இறு­திச் சுற்று ஆட்­ட­மாக நினைத்­துக்­கொண்டு விளை­யா­டும்­படி எனது ஆட்­டக்­கா­ரர்­க­ளி­டம் கூறி­னேன். மலே­சி­யா­வுக்கு எதி­ராக நாங்­கள் காட்­டிய தீவி­ரத்தை சிங்­கப்­பூ­ருக்கு எதி­ரா­க­வும் நாங்­கள் காட்ட வேண்­டும்.

"சிங்­கப்­பூர் குழு விளை­யா­டு­வதை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். தாக்­கு­தல், தற்­காப்பு இரண்­டி­லும் அக்­குழு நன்­றா­கச் செயல்­ப­டு­கிறது. சிங்­கப்­பூர் குழு­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் நாங்­கள் மெத்­த­ன­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது," என்­றார் ஷின் டே யோங்.