ஒலிம்பிக் பதக்கத்துக்குக் குறிவைக்கும் லோ கியன் இயூ

1 mins read

சிங்கப்பூர்: உல­கப் பூப்­பந்­துப் போட்டியில் தங்­கம் வென்று முத்­திரை பதித்­துள்ள சிங்­கப்­பூர் வீரர் லோ கியன் இயூ நேற்று சிங்­கப்­பூர் திரும்­பி­னார். சாங்கி விமான நிலை­யத்­தில் அவ­ருக்கு அமோக வர­வேற்பு தரப்­பட்­டது. உல­க­ள­வில் சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை தேடித் தந்­துள்ள லோ அடுத்த இலக்­குக்­குக் குறி­வைத்­து­விட்­டார். ஒலிம்­பிக் போட்­டி­யி­லும் தங்­கம் வென்று வர­லாற்­றில் அவர் இடம்­பி­டிக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் பூப்­பந்­துச் சங்­கம் விரும்­பு­கிறது. அதற்­குத் தேவை­யான ஏற்­பா­டு­களை அது செய்து வரு­கிறது. உல­கப் பூப்­பந்­துப் போட்­டி­யில் வாகை சூட, போட்­டிக்கு முன்பு ஒலிம்­பிக் போட்­டி­யில் தங்­கப் பதக்­கம் வென்ற டென்­மார்க்­கின் விக்­டர் அஸெல்­ச­னு­டன் ஒரு மாதப் பயிற்­சி­யில் லோ ஈடு­பட்­டதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

எனவே, ஒலிம்­பிக் போட்­டிக்­குத் தயா­ரா­கும் வகை­யில் லோ தொடர்ந்து அஸெல்­ச­னு­டன்

பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வார் என்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.