அடிலெய்ட்: இங்கிலாந்து- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
களுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதை அடுத்து, இம்மாதம் 16ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது போட்டியில், பூவா தலையாவில் வென்று முதலில் பந்தாடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டு கள் இழப்பிற்கு 473 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 230 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவால்மிக்க இலக்கை நோக்கி விளையாடிய இங்கி லாந்து, 192 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டு
களையும் இழந்தது. இதன் விளைவாக ஆஸ்திரேலிய அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 எனும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

