செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. சிவப்பு பந்துகளைப் பயன்படுத்தும் டெஸ்ட் விளையாட்டு போட்டிகள் செஞ்சூரியன், கேப்டவுன், மற்றும் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகின்றன.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளை நேரில் சென்று பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கிருமிப் பரவலைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் கூறியது. ஆட்டங்களை நேரில் பார்க்க முடியாததால் இரு அணிகளின் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

