டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானுடன் மோதியது.
ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் மேல் தாக்குதல்களை நடத்தினர். இடை
வேளையின்போது இந்தியா 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் இந்தியா தனது கோல் வேட்டையைத் தொடர்ந்தது.
இறுதியில், இந்தியா 6-0 எனும் கோல் கணக்கில் ஜப்பானைப் புரட்டி எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதுவே இப்போட்டியில் இந்தியா பதிவு செய்துள்ள
மூன்றாவது வெற்றியாகும்
இப்போட்டியில் இந்தியா அதன் முதல் ஆட்டத்தில் தென்கொரிய அணியை எதிர்கொண்டு 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை
கண்டது.
அதையடுத்து, போட்டியை ஏற்று நடத்தும் பங்ளாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நான்கு ஆட்டங்களில் களம்இறங்கி மூன்று வெற்றிகள், ஒரு சமநிலை என 10 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.
மிகவும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இப்போட்டியின் வெற்றியாளர் கிண்ணத்தை ஏந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

