வெற்றி முனைப்புடன் சிங்கப்பூர் குழு

வெற்றி முனைப்புடன் சிங்கப்பூர் குழு

1 mins read

சிங்கப்பூர்: சுசுகி கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யின் இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெற சிங்­கப்­பூர் ஆட்­டக்­கா­ரர்­கள் முனைப்­பு­டன் உள்­ள­னர். அதேபோல இந்­தோ­னீ­சி­யா­வும் கோல் பசி­யு­டன்

காத்­து­க்கொண்­டி­ருக்­கிறது.

இன்றி­ரவு இவ்­விரு அணி­

க­ளுக்­கும் இடை­யி­லான அரை­யி­று­திச் சுற்­றின் இரண்­டா­வது ஆட்­டம் தேசிய விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­பெ­று­கிறது.

முதல் ஆட்­டத்­தில் இரு குழுக்­களும் தரப்­புக்கு ஒரு கோல் போட்டு சம­நிலை கண்­டன. எனவே, வெற்­றிக்­குக் குறி­வைத்து இரு குழுக்­களும் இன்று கள­ம்­இறங்­கும் என்­ப­தில் துளி­ய­ள­வும் சந்­தே­கமில்லை.

முதல் சுற்று ஆட்­டங்­களில் கோல் மழை பொழிந்த இந்­தோ­னீ­சி­யா­வின் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­க­ளைச் சமா­ளிக்­கும் மிகக் கடு­மை­யான சவாலை சிங்­கப்­பூர் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர்­கள் மீண்­டும் எதிர்­கொள்ள இருக்­கின்­ற­னர்.

கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற ஆட்­டத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே மிகக் கடு­மை­யான போட்டி நில­வி­யது. ஆட்­டத்­தின் 28வது நிமி­டத்­தில் இந்­தோ­னீ­சியா கோல் போட்டு முன்­னிலை வகித்­தது.

துவண்­டு­வி­டா­மல் போரா­டிய சிங்­கப்­பூர், ஆட்­டத்­தின் 70வது நிமி­டத்­தில் இக்­சான் ஃபாண்டி மூலம் ஆட்­டத்­தைச் சமன் செய்­தது.

சிங்­கப்­பூர் ஆகக் கடை­சி­யாக 2012ஆம் ஆண்­டில் சுசுகி கிண்­ணத்தை வென்­றது. பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இறு­திச்

சுற்­று­க்­குத் தகுதி பெறும் வாய்ப்பு அதற்­குக் கிடைத்­துள்­ளது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்­

ப­டுத்தி, சொந்த மண்­ணில் இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறு­வதே சிங்­கப்­பூர் குழு­வின் இலக்கு.