மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பெலே

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பெலே

1 mins read

சாவ் பாவ்லோ: பிரேசிலின் காற்பந்து சகாப்தம் பெலே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெலே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பெருங்குடலில் இருந்த கட்டியை அகற்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து பல சிகிச்சை தேவைப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் தங்கிய பெலே, தமது குடும்பத்தினருடன் சேர்ந்து கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட வீடு திரும்பியுள்ளார்.

"பெலேயின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரது பெருங்குடலில் கட்டியிருப்பது கடந்த செப்டம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சையை அவர் தொடர்வார்," என்று சாவ் பாவ்லோவில் உள்ள ஆல்பர்ட் ஆன்ஸ்டைன் மருத்துவமனை தெரிவித்தது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வீடு திரும்புவது குறித்து 81 வயது பெலே மகிழ்ச்சி தெரிவித்தார்.