சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஆக வேகமான 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரராக முத்திரை பதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்
19 வயது மார்க் பிரயன் லுயிஸ்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு மார்க் 8 வயதாக இருந்தபோது, அவரது தந்தை அவரை செம்பவாங் பூங்காவுக்கு அழைத்துச் சென்றார். அந்த இளம் வயதிலியே மார்க் நான்கு கிலோ மீட்டர் தூர மெதுவோட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்து அவர் நிச்சயம் ஓட்டப்பந்தய வீரராவார் என்று புரிந்துகொண்டதாக அவரது தந்தை கில்பர்ட் லுயிஸ் தெரிவித்தார். இம்மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற்ற உள்ளூர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.39 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார் மார்க். தேசிய வீரர் யு.கே. ஷியாம் பதிவு செய்த தேசிய சாதனை நேரத்தைவிட இது 0.02 வினாடி குறைவு.

