ஏமாற்றம், அதிர்ச்சி, கவலை

4 mins read
d1d683b5-4ea5-4578-b785-b48e92492986
சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது சிங்கப்பூருக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அது கோலாகியிருந்தால் சிங்கப்பூர் வெற்றியடையும் நிலை பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஃபாரிஸ் ரம்லி (வலமிருந்து 2வது) அந்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கத் தவறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுசுகி கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனீசியாவிடம் போராடித் தோற்றது சிங்கப்பூர்

சிங்­கப்­பூர்: மூன்று ஆட்­டக்­கா­ரர்­கள் சிவப்பு அட்டை காண்­பிக்­கப்­பட்டு திடலை விட்டு வெளி­யேறி, குழு­வில் எட்டு ஆட்­டக்­கா­ரர்­களே எஞ்­சி­யி­ருந்­தா­லும், சிங்­கப்­பூர் தேசிய காற்­பந்­துக் குழு அந்­தப் பின்­ன­டைவு நிலைக்­குள் தள்­ளப்

படா­மல், அதி­லி­ருந்து துணிச்­ச­லாக மீண்டு வந்து அபா­ர­மான ஆட்­டத் திறனை வெளிப்­ப­டுத்தி, அனை

வரின் பாராட்­டு­க­ளை­யும் பெற்­றது.

சனிக்­கி­ழமை இரவு தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்ற சுசுகி கிண்ண இரண்­டாம் சுற்று அரை­யி­று­திப் போட்­டி­யில் இயல்­பான நேர முடி­வில் சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் 2-2 என்ற கோல் கணக்­கில் சம­நி­லை­யில் இருந்­த­தால், ஆட்­டம் கூடு­தல் நேரத்­துக்­குச் சென்­றது. அதில் இந்­தோ­னீ­சியா 4-2 என்ற கோல் கணக்­கி­லும் 5-3 என்ற ஒட்டு மொத்த கோல் கணக்­கி­லும் வெற்றி பெற்­ற­தால், அந்த அணி இறு­திப் போட்­டிக்­குத் தகுதி பெற்­றது.

இது இந்­தோ­னீ­சி­யா­வுக்கு ஆறா­வது சுசுகி கிண்ண இறு­திப் போட்டி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அரை­யி­று­திப் போட்டி போன்ற முக்­கி­ய­மான ஆட்­டங்­களில் நடு­வர்­க­ளின் பங்கு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இல்லை என்று இந்­தோ­னீ­சி­யக் குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் ஷின் டே-யோங், வியட்­னா­மின் பயிற்­று­விப்­பா­ளர் பார்க் ஹாங்-சியோ இரு­வ­ரும் கருத்­துத் தெரி­வித்­து­இருந்­த­னர். எதிர்­கா­லத்­தில் இது­போன்ற முக்­கி­ய­மான போட்­டி­களில் 'விஏ­ஆர்' எனப்­படும் காணொளி உதவி நடு­வர் தொழில்­நுட்­பத்­தைப் பயன்படுத்­த­லாம் என்­றும் அவர்­கள் யோசனை தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தின ஆட்­டத்­துக்­குப் பிறகு சிங்­கப்­பூர் குழு­வின் பயிற்­று­ விப்­பா­ளர் டட்­சுமா யோஷி­டா­வும் நிச்­ச­ய­மாக இந்­தக் கருத்­து­களை ஒப்­புக்­கொண்­டி­ருப்­பார்.

இந்­தோ­னீ­சி­யா­வு­ட­னான ஆட்­டத்­தில், சிங்­கப்­பூர் குழு­வுக்கு எதி­ராக ஓமா­னின் நடு­வர் கசிம் மட்­டார் அலி அல்-ஹட்­டாமி எடுத்த பல முடி­வு­கள் அவர் உட்­பட சிங்­கப்­பூர் குழு­வின் அதி­கா­ரி­கள் மட்டு மல்­லா­மல் அரங்­கில் குழு­மி­யி­ருந்த 9,982 ரசி­கர்­க­ளுக்­கும் பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தின.

ஆட்­டத்­தின் 11வது நிமி­டத்­தில் எஸ்‌ரா வாலி­யான் போட்ட கோலால் இந்­தோ­னீ­சியா முன்­ன­ணிக்­குச் சென்­றது. 36வது நிமி­டத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வின் விட்­டானை சரி­யான முறை­யில் தடுத்து நிறுத்­தி­னார் என்­றா­லும் அது நடு­வ­ரின் பார்­வைக்­குத் தவ­றா­கத் தோன்­றிய தால், சிங்­கப்­பூ­ரின் சஃபுவான் பஹா­ரு­டி­னுக்கு மஞ்­சள் அட்டை காண்­பிக்­கப்­பட்­டது.

ஐந்து நிமி­டம் கழித்து சிங்­கப்­பூ­ரின் ஏமி ரெச்சாவை, இந்­தோ­னீ­சி­யா­வின் ரஹ்­மாட் இரி­யாந்தோ முரட்­டுத்­த­ன­மாக வீழ்த்­தி­னார். ஆனால், நடு­வ­ரின் பார்­வைக்கு அது தவ­றா­கத் தோன்­றா­த­தால், சிங்­கப்­பூர் குழு­வின் கிறிஸ்­மஸ் கொண்­டாட்­டத்­தில் இருள் சூழும் நேரம் தொடங்­கி­விட்­டது என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­யது.

முற்­பாதி ஆட்­டம் முடி­வ­டை­யும் தரு­ணத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வின் ரிக்கி ரிதோ­வு­டன் சிங்­கப்­பூ­ரின் சஃபுவான் பஹா­ரு­டின் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­தால், நடு­வர் அவ­ருக்கு இரண்­டா­வது மஞ்­சள் அட்­டை­யும் சிவப்பு அட்­டை­யும் காண்­பித்து திடலை விட்டு வெளி­யேற்­றி­னார்.

சில வினா­டி­கள் கழித்து சிங்­கப்­பூ­ரின் சோங் உய்-யங் ஒரு கோல­டித்து ஆட்­டத்தை சமன் செய்­தார். 67வது நிமி­டத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வின் இர்­ஃபான் ஜெயாவை ஆபத்­தான முறை­யில் வீழ்த்­திய தாகக் கூறி சிங்­கப்­பூ­ரின் இர்­ஃபான் ஃபாண்டிக்கு நடு­வர் சிவப்பு அட்டை காண்­பித்­தார்.

இதில் கவ­னிக்க வேண்­டி­யது என்­ன­வென்­றால், இந்­தோ­னீ­சிய ஆட்­டக்­ கா­ரர்­கள் 18 முறை தவறு செய்­த­போ­தி­லும் ஒரு­மு­றை­கூட அவர்­க­ளுக்கு மஞ்­சள் அட்டை காண்­பிக்­கப்­ப­ட­வில்லை.

74வது நிமி­டத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வின் மற்­றொரு தவற்­றால், சிங்­கப்­பூ­ருக்­குக் கிடைத்த 'ஃபிரிகிக்' வாய்ப்பை அற்­பு­த­மாக கோலாக்­கி­னார் ஷாடான் சுலை­மான்.

சிங்­கப்­பூர் கோல் காப்­பா­ளர் ஹசான் சன்னி அரு­மை­யாக விளை­யாடி எதி­ரணி கோல் போடும் வாய்ப்­பு­க­ளைத் தடுத்­துக்­கொண்­டி­ருந்­தார். அதே­போல் 87வது நிமி­டத்­தில் எதி­ர­ணி­யின் விட்­டா­னின் முயற்­சியை ஹசான் தடுத்­தார்.

இருப்­பி­னும் ப்ர­தாமா அர்­ஹான் அதைக் கோலாக்­கி­னார். 'ரீப்­பிளே' காட்­சி­க­ளைப் பார்க்­கும்­போது, அர்­ஹான் 'ஆஃப்சைட்' நிலை­யில் இருந்­தார் என்­பது தெளி­வா­கத் தெரிந்­தும் அது நடு­வர், துணை நடு­வர் கண்­க­ளுக்­குப் புலப்­ப­ட­வில்லை. 89வது நிமி­டத்­தில் சிங்­கப்­பூ­ருக்­குக் கிடைத்த அற்­பு­த­மான பெனால்டி வாய்ப்­பைக் கோலாக்­கத் தவ­றி­னார் ஃபாரிஸ் ரம்லி.

பின்­னர் கூடு­தல் நேரத்­தின் முதல் நிமி­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் ஷவால், பந்தை அப்­பு­றப்­ப­டுத்­தத் தவ­றி­ய­தால், எதி­ர­ணி­யின் இர்­ஃபான் ஜெயா அந்­தப் பந்தை வலைக்­குள் தள்­ளி­னார்.

105வது நிமி­டத்­தில் இந்­தோ­னீ­சியா தனது 4வது கோலை­யும் போட்டு, தனது வெற்­றியை உறு­திப் படுத்­தி­யது.

119வது நிமி­டத்­தில் இர்­ஃபான் ஜெயாவை முரட்­டுத்­த­ன­மாக வீழ்த்­தி­ய­தால் சிங்­கப்­பூ­ரின் கோல் காப்­பா­ளர் ஹசா­னுக்கு சிவப்பு அட்டை காண்­பிக்­கப்­பட்­டது.

ஆட்­டம் பற்றி கருத்­து­ரைத்த சிங்­கப்­பூர் குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் டட்­சுமா யோஷிடா, "சிங்­கப்­பூர் அணி வெளிப்­ப­டுத்­திய மிகச் சிறந்த குழு உணர்வு என்னை மெய்­சி­லிர்க்க வைத்­தது. ஓர் ஆட்­டக்­கா­ரரை இழந்­தோம். பின்­னர் இரண்­டா­வது ஆட்­டக்­கா­ரர். அதன் பிறகு மூன்­றா­வது ஆட்­டக்­கா­ரர். இருப்­பி­னும் குழு­வின் இறு­தி­வரை போரா­டும் ஆற்­றல்­தான் மிக மிக முக்­கி­ய­மா­னது. நாம் மேலும் வலு­வாக உரு­வாக அது­தான் நமக்­குத் தேவை.

"ஆசி­யா­வின் பலம் வாய்ந்த குழுக்­கள் வரி­சை­யில் நாமும் இடம்­பெற வேண்­டும் எனும் வேட்­கை­யில் ஆட்­டக்­கா­ரர்­கள் நம்­பிக்கை கொள்ள­வேண்­டும். இல்­லை­யேல் நம்­மால் சாதிக்க முடி­யாது," என்­றார்.

தோல்­வி­ய­டைந்­தா­லும் சிங்­கப்­பூர் காற்­பந்­துக் குழு­வின் கடை­சி­வரை போரா­டும் தன்­மையை சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் வெகு­வாக சமூக ஊட­கங்­களில் பாராட்­டி­னர்.

பிர­த­மர் லீ சியன் லூங், கூறு­கை­யில் "2012ஆம் ஆண்­டி­லி­ருந்து இப்­போ­து­தான் சிங்­கப்­பூர் குழு சுசுகி கிண்ண அரை­யி­று­திப் போட்­டிக்­குத் தகுதி பெற்­றுள்­ளது. இந்­தோ­னீ­சி­யா­வி­டம் தோல்வி கண்­டா­லும், சிறந்த போரா­டும் தன்­மையை சிங்­கப்­பூர் அணி­யி­னர் போட்­டி­யில் காட்­டி­னர். இந்­தத் துணிச்­ச­லான முயற்­சி­யில் அபார ஆட்­டத் திறனை வெளிப்­ப­டுத்­திக் கவர்ந்த சிங்­கப்­பூர் அணிக்கு எனது பாராட்­டு­கள்," என்­றார்.

"மிகச் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய சிங்­கப்­பூர் அணி, காலாங் கர்­ஜ­னை­யை­யும் திரும்ப கொண்டு வந்­துள்­ளது," என்­றார் அமைச்­சர் எட்­வின் டோங்.