புதுடெல்லி: இந்திய சுழற்பந்து வீச்சாளா் ஹா்பஜன் சிங், 41, (படம்) எல்லாவிதமான கிரிக்கெட்போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறு
வதாக வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகச் செய்திகள் வெளிந்துள்ளன.
ஓய்வுபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில ஆண்டு களாக இருந்தபோதிலும் தற்போது அதற்கான முடிவை அறிவிக்க வேண்டிய வேளை வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவை ஹர்பஜன் சிங் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதனால் அவர் காங்கிரஸ் கட்சி யில் இணைகிறார் என்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடு கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், "பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது. அரசியல் என்பது மக்கள் பணி. அதை ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும். அரைமனதுடன் செய்ய எனக்கு விருப்பமில்லை.
"அரசியலில் நுழைய லாம் என எப்போது மனதளவில் நான் தயார்ப் படுத்திக்கொள்கிறேனோ அப்போது அது பற்றி அறிவிக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

