'ஹாட்ரிக்': டெஸ்ட் போட்டியில் சாதித்த முதல் இந்தியர்

'ஹாட்ரிக்': டெஸ்ட் போட்டியில் சாதித்த முதல் இந்தியர்

1 mins read

1998ஆம் ஆண்டு தொடங்­கிய ஹர்­ப­ஜன் சிங்­கின் கிரிக்­கெட் பய­ணம் 23 ஆண்­டு­ளுக்குப் பின்னர் நிறை­வுக்கு வந்­துள்­ளது. ஷார்­ஜா­வில் 1998ஆம் ஆண்டு நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான ஒரு­நாள் அனைத்­து­ல­கப் போட்­டி­யில் அறி­மு­க­மான அவர், ஆகக்கடை­சி­யாக 2016ஆம் ஆண்டு பங்­ளா­தே­ஷில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களுக்கு எதி­ரான டி20 ஆட்­டத்­தில் விளை­யா­டி­னார். 2001 பிப்­ர­வரியில் இந்­தியா வந்த ஆஸ்­தி­ரே­லிய அணி, கோல்­கத்­தா­வில் நடந்த 2வது டெஸ்­டில் விளையாடியது. அந்தப் போட்டியின் முதல் இன்­னிங்­ஸில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அடுத்­த­டுத்த 3 விக்­கெட்­டுகளைச் சாய்த்து ஹா்பஜன் சிங் 'ஹாட்­ரிக்' சாதனை புரிந்­தார். டெஸ்ட் கிரிக்­கெட் வர­லாற்­றில் 'ஹாட்­ரிக்' விக்­கெட் எடுத்த முதல் இந்­தியா் என்ற பெருமையை அப்­போது அவர் பெற்றாா். அந்­தத் தொட­ரில் ஹா்பஜன் சிங் 32 விக்­கெட்­டு­கள் சாய்த்தாா்.