தன்னம்பிக்கையின் உச்சியில் இருக்கும் இளம் வீரர்கள்

தன்னம்பிக்கையின் உச்சியில் இருக்கும் இளம் வீரர்கள்

1 mins read

நோரிச்: இந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் பரு­வத்­தில் சரி­யான வேளை­யில் ஆர்­ச­ன­லின் ஆற்­றல் வெளிப்­படும் அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன. பெரி­தும் சிர­மப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த இந்த அணி, லீக் பட்­டி­ய­லில் தொடர்ந்து நான்­கா­வது இடத்தை வகித்துவருகிறது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற லீக் ஆட்­டத்­தில் நோரிச் சிட்­டியை 5-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது ஆர்­ச­னல். புக்­காயோ சாக்கா, கியே­ரன் டயர்னி, கேப்­ரி­யல் மார்­டி­னெல்லி போன்ற இதன் இளம் வீரர்­கள் மிக­வும் அபா­ர­மாக ஆடி­வரு­கின்­ற­னர். இத்­த­னைக்­கும் இது பரு­வத்­தின் பாதிக் கட்­டம்­தான்.

மற்­றோர் ஆட்­டத்­தில் கிரிஸ்­டல் பேலஸை 3-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது ஆர்­ச­ன­லின் பரம வைரி­யான டாட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர்.

புதிய நிர்­வாகி ஆன்­டோ­னியோ கொன்­டே­யின் தலை­மை­யில் அசத்­தி­வ­ரு­கிறது ஸ்பர்ஸ். ஆகக் கடைசி நில­வ­ரப்­படி லீக் பட்­டி­ய­லில் ஐந்­தாம் இடத்­தில் உள்­ளது ஸ்பர்ஸ்.

இப்­ப­ரு­வத்­தின் தொடக்­கத்­தில் சரி­யாக விளை­யா­டா­த­போ­தும் தங்­க­ளின் படிப்­ப­டி­யான முன்­னேற்­றத்­தால் இதர அணிகளுக்கு மிரட்டல் விடுக்கின்றன ஸ்பர்ஸ், ஆர்­ச­னல்.