பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை பெய்ததால் நடைபெறவில்லை.
தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலும் மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் களமிறங்குகிறது இந்தியா. நேற்று முன்தினம் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ஓட்டங்களை எடுத்தது. இந்தியாவின் கேஎல் ராகுல் 122 ஓட்டங்களை எடுத்தார். அஜிங்யா ரஹானே, 81 பந்துககளில் 40 ஓட்டங்களை எடுத்தார்.போராடவேண்டிய நிலையில் உள்ளது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் ஆட்டம் பிரிட்டோரியாவின் சென்ஞ்சூரியன் அரங்கில் நடைபெறுகிறது.
கிருமிப் பரவல் அச்சத்தால் இத்தொடர் சற்று மாற்றியமைக்கப்பட்டது.

