மெல்பர்ன்: ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் வெல்லும் விளிம்பில் உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இத்தொடரின் மூன்றாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 185 ஓட்டங்களை எடுத்தது.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 267 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு இன்னும் ஆறு விக்கெட்டுகள் எஞ்சியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறது. ஆஷஸ் கிண்ணத்தை 33 முறை வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா.
இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் பந்தடிப்பு சரியாக இல்லை என்பது பரவலான கருத்து. எனினும், தனது இரண்டாவது இன்னிங்ஸில் பல தரப்பினர் எதிர்பார்த்ததைவிட மோசமாகப் பந்தடித்தது இங்கிலாந்து.