சிங்கப்பூர் பூப்பந்து விளையாட்டாளர் லோ கியன் இயூ, இந்தியப் பொது விருதுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடுமையாகப் போராடியும் பட்டம் வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார்.
கடந்த மாதம் உலக வெற்றியாளர் பட்டத்தைத் தனதாக்கி, பூப்பந்து உலகில் புதிய நாயகனாக உருவெடுத்த 24 வயது லோ, இந்தியப் பொது விருதிலும் வாகை சூடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 17ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவின் லக்ஷயா சென்னிடம் 24-22, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று ஏமாற்றமளித்தார் 15ஆம் இடத்தில் இருக்கும் லோ.

