பிரிமியர் லீக்கில் தொடர முனைப்பு காட்டும் நார்விச்

வாட்­ஃபர்ட்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து ஆட்­டத்­தில் வாட்­ஃபர்ட் குழுவை 3-0 எனும் கோல் கணக்­கில் நார்­விச் சிட்டி நேற்று முன்­தி­னம் பந்­தா­டி­யது.

அமெ­ரிக்க நட்­சத்­தி­ர­மான ஜோஷ் சார்­ஜெண்ட் போட்ட இரண்டு கோல்­கள் நார்­விச்­சின் வெற்­றிக்கு வித்­திட்­டன.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் போட்டி­ யில் சார்­ஜெண்ட் கோல் போட்டு­ இ­ருப்­பது இதுவே முதல்­முறை.

எனவே, அண்­மை­யில் தந்­தை­யான 21 வயது சார்­ஜெண்ட்­டுக்கு இது இரட்­டிப்­புக் கொண்­டாட்­டம்.

லீக் பட்­டி­ய­லில் கடைசி மூன்று (18வது, 19வது, 20வது) இடங்­களில் போட்­டியை முடிக்­கும் குழுக்­கள் அடுத்த பரு­வத்­தில் இரண்­டாம் நிலை லீக்­கிற்­குத் தள்­ளப்­படும்.

வாட்­ஃபர்ட் குழு­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் வெற்றி பெற்­ற­தன் மூலம், கடைசி மூன்று இடங்­க­ளி­லி­ருந்து நார்விச் வெளி­யேறி 17வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது.

முற்­பாதி ஆட்­டத்­தில் இரு குழுக்­களும் கோல் ஏதும் போட­வில்லை.

பிற்­பாதி தொடங்கி கிட்­டத்­தட்ட ஆறு நிமி­டங்­களில் நார்­விச்­சின் முதல் கோலை சார்­ஜெண்ட் போட்­டார். அவர் கோல் போட்ட விதம் அனை­வ­ரை­யும் பிர­மிக்க வைத்­தது.

ஆட்­டத்­தின் 74வது நிமி­டத்­தில் வாட்­ஃபர்ட் குழு­வின் பெனால்டி எல்­லைக்­குள் அனுப்­பப்­பட்ட பந்­தைத் தலை­யால் முட்டி வலைக்­குள் சேர்த்­தார் சார்­ஜெண்ட்.

இந்நிலையில், ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் வாட்ஃபர்ட் குழுவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. தப்பாட்டம் காரணமாக அக்குழுவின் இமானுவல் டெனி சுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டத்தை வாட்ஃபர்ட் வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் விளை யாடியது. இருப்பினும், அது மனந்தளராமல் கோல் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் நார்விச்சின் தற்காப்பு சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை.

ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது, வாட்ஃபர்ட் தற்காப்பு ஆட்டக்காரர் சொந்த கோல் போட்டார். வாட்ஃபர்ட் குழு லீக் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!