பெரிய மனதுடன் நடந்துகொண்ட ரானிக்

மான்­செஸ்­டர்: பிரென்ட்­ஃபர்ட் குழு­வுக்கு எதி­ராக கடந்த

வியா­ழக்­கி­ழ­மை­யன்று மான்­செஸ்­டர் யுனை­டெட் கள­மி­றங்கி 3-1 எனும் கோல் கணக்­கில் வாகை சூடி­யது.

ஆட்­டத்­தின் 71வது நிமி­டத்­தில் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வுக்­குப் பதி­லாக ஹென்ரி மெக்­வா­யர் மாற்று ஆட்­டக்­கா­ர­ரா­கக் கள­மி­றக்­கப்­பட்­டார். யுனை­டெட் குழு­வின் இடைக்­கால நிர்­வா­கி­யான ரால்ஃப் ரானிக்­கின் இந்த முடிவு, நட்­சத்­திர வீரர் ரொனால்­டோவை அதி­ருப்தி அடை­யச் செய்­தது.

தமது கோபத்தை அவர் வெளிப்­ப­டை­யா­கக் காட்­டி­னார்.

இந்­நி­லை­யில், ரொனால்டோ நடந்­து­கொண்ட விதத்­தைப் பெரிது­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என்று ரானிக் தெரி­வித்­துள்­ளார்.

“ரொனால்­டோவை நான் குறை­கூ­றப்­போ­வ­தில்லை. ஆனால் தனக்­குப் பதி­லாக மாற்று ஆட்­டக்­கா­ரர் கள­மி­றக்­கப்­ப­டும்­போது ஆட்­டக்­கா­ரர்­கள் உணர்ச்­சி­வ­சப்­

ப­டக்­கூ­டாது. அதுவே ஒவ்­வொரு நிர்­வா­கி­யின் விருப்­ப­மாக இருக்­கும்.

“அது­மட்­டு­மல்­லாது, ஆட்­டக்­கா­ரர்­க­ளின் இத்­த­கைய செயல்­களைத் தொலைக்­காட்சி மூலம் பலர் பார்க்­கின்­ற­னர். இத­னால் யாருக்­கும் எவ்­வி­தப் பல­னும் இல்லை. ஆட்­டக்­கா­ரர்­கள் உணர்ச்சி­வ­சப்­பட்டு இவ்­வாறு நடந்­து­கொள்­ளும்­போது அதை நான் பெரி­து­ப­டுத்­து­வ­தில்லை,” என்­றார் ரானிக்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!