இந்தியன் பிரிமியர் லீக் 2022 மெகா ஏலத்தின் இரண்டாவது நாளில், சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட்டை ரூ.8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
டிம், ரூ.40 லட்சம் அடிப்படை விலையில் வைக்கப்பட்டார். எனினும், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடனான ஏலம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டிம் டேவிட்டை மும்பை இந்தியன்ஸ் ஒருவாரியாக கைப்பற்றிவிட்டது.
கடந்த ஐபிஎல் பருவத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டிம் டேவிட் விளையாடினார்.
யார் இவர்?
சிங்கப்பூர் கிரிக்கெட் வீரரான டிம் டேவிட், சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கும் அனைத்துலக டி20 தொடரில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.
2021 ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பின்னர் ரூ.20 லட்சத்துக்கு வாங்கியிருந்தது.

