சிட்டியை விடாது துரத்தும் லிவர்பூல்

சிட்டியை விடாது துரத்தும் லிவர்பூல்

1 mins read
5472a0c9-7211-4b0a-bce6-52903b50661a
லிவர்பூல் நிர்வாகி கிளாப் (இடது), மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி கார்டியோலா. படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

லிவர்­பூல்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லிக், ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக், எஃப்ஏ கிண்­ணம் ஆகிய மூன்று காற்பந்துப் போட்­டி­க­ளி­லும் மான்­செஸ்­டர் சிட்டிக்­குப் போட்­டி­யாக விளங்­கு­கிறது லிவர்­பூல்.

இவ்­விரு அணி­களும் இந்த மூன்று போட்­டி­க­ளி­லும் கிண்­ணத்தை வெல்­லும் இலக்­கைக் கொண்­டுள்­ளன.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­ பட்டியிலில் இவ்விரு அணிகளும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.

'சாம்­பி­யன்­ஷிப்' எனும் பிரி­மி­யர் லீக்­கிற்கு அடுத்த நிலை­யில் உள்ள லீக்கில் போட்­டி­யி­டும் நோட்­டிங்­ஹம் ஃபாரஸ்ட்டை லிவர்­பூல் இன்று எ­ஃப்ஏ கிண்­ணப் போட்­டி­யின் காலிறு­திச் சுற்­றில் சந்­திக்­கிறது. மற்­றொரு காலி­றுதி ஆட்­டத்­தில் சவுத்­ஹேம்ப்­ட­னு­டன் மோது­கிறது சிட்டி.

இரு அணி­களும் அரை­யி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றும் என்­பது பர­வ­லான எதிர்­பார்ப்பு. ஆனால் எ­ஃப்ஏ கிண்­ணத்­தில் எதிர்­பாரா முடி­வு­கள் வரு­வது ஆச்­ச­ரி­ய­மல்ல. அத­னால் மெத்­த­ன­மாக இருக்­கக்­கூ­டாது என்­பது லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளாப், சிட்டி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா ஆகிய இரு­வ­ருக்­கும் தெரி­யும்.

பிரி­மி­யர் லீக்­கில் சில வாரங்­களுக்கு முன் முத­லி­டத்தை வகிக்­கும் சிட்­டிக்­கும் இரண்­டாம் இடத்­தில் உள்ள லிவர்­பூ­லுக்­கும் இடையே சுமார் 13 புள்­ளி­கள் வித்­தி­யா­சம் இருந்­தது.

இப்­போது வித்­தி­யா­சம் ஒரு புள்­ளி­யா­கக் குறைந்து­விட்­டது. சிட்டி தன்­வ­சப்­ப­டுத்­தி­ய கர­பாவ் கிண்­ணத்­தை­யும் இந்­தப் பரு­வத்தில் லிவர்­பூல் வென்­றது.

இங்­கி­லாந்­திலும் ஐரோப்­பா­வி­லும் ஆகச் சிறந்த காற்­பந்து அணி என்ற பெய­ரைப் பெற நினைக்­கும் சிட்­டிக்கு லிவர்­பூல் தொடர்ந்து முட்­டுக்­கட்­டை­யாக இருந்து வந்­துள்­ளது.