ஈராண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் பொது விருதுப் பூப்பந்துப் போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. மொத்தம் $370,000 (S$515,000) பரிசுத் தொகை கொண்ட அந்தப் போட்டி, வரும் ஜூலை 12 முதல் 17ஆம் தேதிவரை நடை பெறும். கொவிட்-19 கட்டுப் பாடுகள் தளர்வை அடுத்து, காலாங் உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டியைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். நடப்பு உலக வெற்றியாளரும் உலகத் தரவரிசையில் பத்தாமிடத்தில் இருப்பவருமான சிங்கப்பூரின் லோ கியன் இயூ (படம்) இப்போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்நாட்டு மக்களுக்குமுன் விளையாடுவதைக் காட்டிலும் மனநிறைவு தருவது வேறு எதுவும் இல்லை என்றார் லோ. மலேசியாவின் லீ ஸி ஜியா, இந்தியாவின் சிந்து உள்ளிட்ட நட்சத்திர ஆட்டக் காரர்களும் வருகைபுரிவர்.
ஜூலையில் சிங்கப்பூர் பொது விருதுப் பூப்பந்து
1 mins read
-

