பெர்லின்: தம் நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு முதல் முறையாக காற்பந்துப் போட்டி ஒன்றில் பங்கேற்றது உக்ரேன் தேசிய குழு. ஜெர்மனியின் மொன்சென்கிளாட்பாக் நகரிலுள்ள பொருஸியா பார்க் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த அந்த ஆட்டத்தில், அந்நாட்டின் கிளாட்பாக் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரேன் குழு தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை நேரில் காண கிட்டத்தட்ட 20,000 பேர் வந்திருந்தனர்.
காற்பந்துத் திடலில் மீண்டும் உக்ரேன்
1 mins read

