தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருமானம்: மெஸ்ஸி முதலிடம்

1 mins read

நியூஜெர்சி: இம்மாதம் 1ஆம் தேதி வரையிலான கடந்த ஓராண்டு காலத்தில் ஆக அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் அர்ஜெண்டினா காற்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி. தற்போது பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்காக விளையாடி வரும் மெஸ்ஸி, இந்த ஓராண்டு காலத்தில் 130 மில்லியன் அமெரிக்க டாலர் (S$181 மி.) வருமானம் ஈட்டியதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. அதில் விளம்பர வருமானமாக மட்டும் 55 மி. டாலர் அவருக்குக் கிட்டியது. அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் லெப்ரோன் ஜேம்ஸ் (121 மி. டாலர்) இரண்டாம் இடத்தையும் நட்சத்திர காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (115 மி. டாலர்) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். பிரேசில் காற்பந்து அணித் தலைவர் நெய்மாருக்கு (95 மி. டாலர்) நான்காம் இடமும் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு (90.7 மி. டாலர்) ஏழாமிடமும் கிட்டின.