14 வயதில் பதக்கம்

ஹனோய்: சக நாட்­ட­வ­ரும் நடப்பு வெற்­றி­யா­ள­ரு­மான கிரியா திகானா அப்­துல் ரகு­மானை 12-11 என்ற புள்­ளிக் கணக்­கில் வெற்­றி­கொண்டு, மக­ளிர் வாட்­சண்டை ‘எபே’ தனி­ந­பர் பிரி­வில் தங்­கப் பதக்­கம் வென்­றார் 14 வய­தே­யான சிங்­கப்­பூ­ரர் எல்லி கோ.

வியட்­னா­மில் நடந்­து­வ­ரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­கும் ஆக இளம் சிங்­கப்­பூர் விளை­யாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரான எல்லி, முதல் முயற்­சி­யி­லேயே தங்­கம் வென்று அசத்­தி­யுள்­ளார்.

31வது தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூருக்­குக் கிட்­டிய இரண்­டா­வது தங்­கப் பதக்­கம் இது.

முன்­ன­தாக நடந்த அரை­ இறுதிப் போட்­டி­களில், எல்லி 15-14 என்ற புள்­ளிக் கணக்­கில் வியட்­னா­மின் வு தி ஹாங்­கை­யும், கிரியா 15-12 என்ற புள்­ளிக் கணக்­கில் தாய்­லாந்­தின் தனீ கொரா­வ­னை­யும் வீழ்த்­தி­னர்.

1989ஆம் ஆண்­டிற்­குப்பின் தனி நபர் வாட்­சண்டையில் தங்கம் வென்ற முதல் சிங்­கப்­பூ­ரர் என்ற சாத­னை­யைக் கடந்த 2019ல் படைத்­தி­ருந்­தார் 21 வய­தான கிரியா.

ஆண்­க­ளுக்­கான ‘சேபர்’ பிரிவு காலி­றுதி­யில், சிங்­கப்­பூ­ரின் சான் ஃபு சியன் 15-12 என்ற புள்­ளிக் கணக்­கில் சக நாட்­ட­வரான சோய் யு யோங்­கைத் தோற்­க­டித்­தார்.

ஆனால், பிற்­ப­க­லில் நடந்த அரை­யி­று­தி­யில் சான் 8-15 என்ற புள்­ளிக் கணக்­கில் தாய்­லாந்து வீர­ரி­டம் தோற்­றுப்­போ­ன­தால் அவ­ருக்கு வெண்­க­லமே கிட்­டி­யது.

முன்­ன­தாக, சீலாட் தற்­காப்­புக் கலை வீரர் இக்­பால் அப்­துல் ரகு­மான் சிங்­கப்­பூ­ருக்கு முதல் தங்­கத்தை வென்று தந்­தி­ருந்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!