37 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு படைத்த மகளிரணி

37 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு படைத்த மகளிரணி

2 mins read

ஹனோய்: சிங்­கப்­பூர் தேசிய மக­ளிர் காற்­பந்து அணி 1985ஆம் ஆண்­டிற்­குப் பிறகு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் முதல் வெற்­றி­யைப் பதிவு­செய்­துள்­ளது.

'பி' பிரி­வில் இடம்­பெற்­றுள்ள சிங்­கப்­பூர் அணி, லாவோ­சுக்கு எதி­ராக நேற்று நடந்த ஆட்­டத்­தில் 1-0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது. மாற்று வீராங்­க­னை­யாக வந்த இஸாட் ரோஸ்னி ஆட்­டத்­தின் 95வது நிமி­டத்­தில் அந்த வெற்றி கோலை அடித்­தார்.

கடந்த 2003ஆம் ஆண்­டிற்­குப் பிறகு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்டி­களில் சிங்­கப்­பூர் மக­ளிர் காற்­பந்து அணி பங்­கேற்­றது இதுவே முதன்­முறை; ஒட்­டு­மொத்­தத்­தில் இது 5ஆம் முறை.

கடை­சி­யாக, கடந்த 1985ஆம் ஆண்டு பேங்­காக்­கில் நடந்த போட்­டி­களில் 2-0 என்ற கோல் கணக்­கில் பிலிப்­பீன்சை சிங்­கப்­பூர் மக­ளி­ரணி வென்­றி­ருந்­தது. அம்­முறை சிங்­கப்­பூர் மக­ளி­ரணி வெள்­ளிப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது.

அத்­து­டன், 1995ஆம் ஆண்­டிற்­குப் பிறகு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூர் மக­ளி­ரணி கோல­டித்­தி­ருப்­ப­தும் இதுவே முதன்­முறை.

தனது முதல் ஆட்­டத்­தில் தாய்­லாந்­தி­டம் 3-0 எனத் தோற்­றுப்­போன சிங்­கப்­பூர் மக­ளி­ரணி, அடுத்­த­தாக நாளை நடக்­க­வுள்ள ஆட்­டத்­தில் மியன்­மாரை எதிர்­கொள்­கிறது.

சிங்கப்பூர்-மலேசியா மோதல்

இதனிடையே, இன்று நடக்கவுள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் சிங்கப்பூர் ஆடவர் காற்பந்து அணி, மலேசியாவைச் சந்திக்கிறது.

கட்­டாய வெற்­றியை நோக்­கிக் களம் காண்­கிறது சிங்­கப்­பூர் அணி. இந்த ஆட்­டத்­தில் வென்­றா­லும்­கூட, அரை இறு­திக்கு முன்­னே­று­வது மற்ற ஆட்­டங்­க­ளின் முடி­வு­க­ளைப் பொறுத்தே அமை­யும். ஆனா­லும், தாங்­கள் அரை­ இ­று­திக்கு முன்­னேற இன்­னும் வாய்ப்பு உள்­ள­தாக நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார் பயிற்­று­நர் நஸ்ரி நசீர்.

சிங்கப்பூர்-மலேசியா ஆட்டம் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.