விளிம்பில் ஆர்சனல்

லண்­டன்: டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் காற்பந்துக் குழு­விற்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு நடந்த இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் 3-0 என்ற கோல் கணக்­கில் தோற்­றுப்­போ­ன­தால், ஆர்­ச­னல் குழு ஐந்­தாண்­டு­க­ளுக்­குப் பிறகு சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்குத் திரும்பும் வாய்ப்பு ஊச­லா­டுகிறது.

ஆட்­டத்­தின் முற்­பா­தி­யிலேயே ஸ்பர்ஸ் குழு­வின் ஹேரி கேன் இரண்டு கோல்­களை அடித்­தார். பிற்­பா­தி­யின் தொடக்­கத்­தில் ஹியூங் மின் சோன் மேலும் ஒரு கோலை அடிக்க, ஸ்பர்­சின் வெற்றி உறு­தி­யா­னது.

ஆட்­டத்­தின் 33வது நிமி­டத்­தில் ராப் ஹோல்­டிங் இரண்­டா­வது மஞ்­சள் அட்டை பெற்று திட­லை­விட்டு வெளி­யே­றி­ய­தால் எஞ்­சிய ஆட்­டத்தை ஆர்­ச­னல் பத்து வீரர்­க­ளு­டன் ஆட வேண்­டி­ய­தா­யிற்று.

இத­னை­ய­டுத்து, ஆர்­ச­னல் 66 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லின் 4ஆம் இடத்­தி­லும் ஸ்பர்ஸ் 65 புள்­ளி­களு­டன் ஐந்­தாம் நிலை­யி­லும் உள்­ளன.

இன்­னும் இரு ஆட்­டங்­களே எஞ்­சி­யுள்ள நிலை­யில், ஆர்­ச­னல் இம்­மு­றை­யே­னும் சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்­குத் தகு­தி­பெ­றுமா என்­பது இன்­னும் உறு­தி­யா­க­வில்லை. இத­னால் கடைசி ஆட்­டம் வரை தவிப்­பி­லேயே இருக்­கும் நிலைக்கு ரசி­கர்­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

போட்­டிக்­குப்­பின் பேசிய ஆர்­சனல் நிர்­வாகி அர்­டேட்டா, தங்­களது அழ­கான ஆட்­டத்தை நடு­வர்­கள் அலங்­கோ­லப்­ப­டுத்­தி­விட்­ட­தா­கக் குற்­றம் சாட்­டி­னார். “நான் ஆறு மாதங்­க­ளுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருப்­பது போன்று உணர்­கி­றேன்,” என்­றார் அவர்.

ஆனால், அர்­டேட்டா அள­விற்கு அ­தி­க­மா­கக் குறை­கூ­று­கி­றார் என்­றும் அவர் ஆட்­டத்­தில் கவ­னம் செலுத்­து­வது நல்­லது என்­றும் ஸ்பர்ஸ் நிர்­வாகி அன்­டோ­னியோ கோன்டே கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!