லண்டன்: கடந்த பிப்ரவரி மாதம் லீக் கிண்ண இறுதிப் போட்டியில் செல்சியை வீழ்த்தி, கிண்ணத்தைக் கைப்பற்றியது போலவே, இன்றிரவு 11.45 மணிக்கு நடக்க உள்ள எஃப்ஏ கிண்ண இறுதிப் போட்டியிலும் அக்குழுவை வெல்ல முடியும் என லிவர்பூல் காற்பந்துக் குழு உறுதியாக நம்புகிறது.
ஆனாலும், நடுக்கள ஆட்டக்காரர் ஃபேபினோ காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாமல் போயிருப்பது லிவர்பூல் குழுவிற்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
செல்சி குழுவின் நிர்வாகியாக தாமஸ் டுக்கல் பொறுப்பேற்றபின், அக்குழு பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் இறுதிவரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

