வில்லாவுடன் 2026 வரை கொட்டின்யோ
லண்டன்: பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர் ஃபிலிப் கொட்டின்யோவை பார்சிலோனா குழுவிடம் இருந்து நிரந்தரமாக விலைக்கு வாங்கியுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆஸ்டன் வில்லா. இதற்காக 20 மில்லியன் யூரோ (S$29 மி.) கைமாறியது. வரும் 2026 வரை வில்லா சார்பில் விளையாட கொட்டின்யோ இணங்கி இருக்கிறார். முன்னதாக, பார்சிலோனா கடந்த ஜனவரியில் அவரை வில்லாவிற்குக் கடனாக வழங்கியது.
வெளியேறியது சென்னை அணி
மும்பை: இந்தியாவில் நடந்துவரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது நடப்பு வெற்றியாளரான சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பந்தடித்த சென்னை அணி 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த எளிய இலக்கை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் எட்டி, மும்பை அணி வெற்றிபெற்றது. இதனை அடுத்து, அடுத்த பருவத்தில் வேகப்பந்து வீச்சு வரிசையை வலுப் படுத்திக்கொள்வோம் என்று சென்னை அணித் தலைவர் டோனி கூறி உள்ளார்.

